மேலும் அறிய

IPL Media Rights LIVE Updates : ஐ.பி.எல். ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்..! வியாகாம்..!

IPL Media Rights 2023-27 LIVE Updates: 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

LIVE

Key Events
IPL Media Rights LIVE Updates :  ஐ.பி.எல். ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்..! வியாகாம்..!

Background

IPL Media Rights 2023-27 LIVE Updates: 

2023ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏல உரிமையை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான ஏலம் ஆன்லைன் மூலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலககோப்பையை போல பிரம்மாண்ட திருவிழாவாக ஐ.பி.எல். தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, இன்று ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்திற்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இந்த முறை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில் கடும் போட்டிகள் நிலவுகிறது. இந்த ஏலத்தில் டிஸ்னி – ஹாட்ஸ்டார், சோனி, ஸ்போர்ட்ஸ் 18, ஜீ என்டெர்டெயிண்மெண்ட், ஆப்பிள், கூகுள்,  ஸ்கை ஸ்போர்ட்ஸ் யுகே மற்றும் தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

அமேசான் பிரைமும் இந்த ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்,  கடும் போட்டி காரணமாக அவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்க ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மதிப்பின்படி 25 லட்சம் ரூபாய் நுழைவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை திருப்பி அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம் மொத்தம் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதன்படி, இந்திய துணை கண்டத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு தனியாக ஒரு ஏலமும், டிஜிட்டல் உரிமத்திற்கு ஒரு ஏலமும், 18 போட்டிகளின் தொகுப்பிற்கான பிரத்யேகமற்ற டிஜிட்டல் உரிமைகள் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான உரிமைகளுக்கு ஏலம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் உரிமம் பெறும் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16, 347.50 கோடிக்கு உரிமத்தை கைப்பற்றியது. இந்த முறை ஏல உரிமை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகும் என்று பிசிசிஐ எதிர்பார்த்து காத்துள்ளது.

19:58 PM (IST)  •  13 Jun 2022

தருமபுரி கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு!

தருமபுரி அருகே பாப்பராப்பட்டியில்  காளியம்மன் கோயில் திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியில் தேர் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு. தேருக்கடியில் சிக்கி படுகாயம் அடைந்த மனோகரன், சரவணம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காயமடைந்த மேலும், மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18:57 PM (IST)  •  13 Jun 2022

ஐ.பி.எல். ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்..! வியாகாம்..!

ஐ.பி.எல். போட்டிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ஓடிடி தள உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் வியாகாம் நிறுவனங்கள் கைப்பற்றி அசத்தியுள்ளன. 

18:09 PM (IST)  •  12 Jun 2022

டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்ளிட்ட மீதமுள்ள இரண்டு தொகுப்புகளுக்கான ஏலம் நாளை நடைபெறும்!

ஏலம் இன்று முடிவடைய இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில், டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் அடங்கிய பண்டில் ஏ மற்றும் பிக்கான ஏலம் ஜூன் 13 (நாளை) வரை நடைபெறும். 18 போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமைகள் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்ளிட்ட மீதமுள்ள இரண்டு தொகுப்புகளுக்கான ஏலம் நாளை மதியம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13:59 PM (IST)  •  12 Jun 2022

ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றி சோனி - ரிலையன்ஸ் இடையே போட்டி..!

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற சோனி நிறுவனம், ரிலையன்ஸ்- வியாகாம் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

12:16 PM (IST)  •  12 Jun 2022

ரிலையன்ஸ் - வியாகாம் இடையே கடும் போட்டி..! உரிமத்தை கைப்பற்றப்போவது யார்..?

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget