Mitchell Starc: ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் அதிகம் - ரூ.24.75 கோடிக்கு ஏலம் போன ஸ்டார்க்!
IPL Auction 2024: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையை மிட்சல் ஸ்டார்க் (Mitchell Starc) பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ( Kolkata Knight Riders) ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் ஸ்டார்க்தான். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இரண்டு முறை அதிக விலைக்கு (’Most Expensive Player’) ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். மினி ஏலம் துபாய் நகரில் நடைபெற்று வருகிறது. மிட்சல் ஸ்டார்க் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அணிகள் ஸ்டார்க் தங்களது அணியில் இடம்பெற விரும்பினர். அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.20.25 கோடி பிட் செய்தது. 25 கோடி ரூபாய் நெருங்கிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. மிட்சல் ஸ்டார்க் சராசரியாக 60.4km/h (99.7mph) என்ற வேகத்தில் பந்து வீச கூடியவர்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. பாட் கம்மின்சிஸை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க, ரூ. 4.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் விற்கப்படவில்லை. ஹைதராபாத் அணி ரூ. 160 கோடிக்கு, இந்திய அணி வீரர் ஜெய்தேவ் உனத்கட்- ஐ வாங்கியது. 2023-ம் ஆண்டு ரூ.18.50 விலை கொடுத்து சாம் கரண்-ஐ ஏலம் எடுத்தது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் விவரம்
ஆண்டு | வீரர் பெயர் | தொகை ரூபாயில் |
2024 | மிட்சல் ஸ்டார்க் (கொல்கத்தார்) | ரூ.24.75 கோடி |
2023 | சாம் கரண் (பஞ்சாப் கிங்க்ஸ்) | ரூ.18.50 கோடி |
2022 | இசான் கிஷான் (மும்பை ) | ரூ.15.25 கோடி |
2021 | கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான்) | ரூ. 16.25 கோடி |
2020 | பாட் கம்மிங்ன்ஸ் (கொல்கத்தா) | ரூ.15.5 கோடி |
2019 | ஜெயதேவ் உனாகட் (RR), வருண் சக்கரவர்த்தி (KXIP) | ரூ.8.4 கோடி |
2018 | பென் ஸ்டோக்ஸ் (இராஜஸ்தான்) | ரூ.12.5 கோடி |
2017 | பென் ஸ்டோக்ஸ் (RPS) | ரூ.14.5 கோடி |
2016 | ஷேன் வாட்சன் (பெங்களூரு) | ரூ.9.5 கோடி |
2015 | யுவராஜ் சிங் (டெல்லி) | ரூ.16 கோடி |
2014 | யுவராஜ் சிங் ( பெங்களூரு) | ரூ.14 கோடி |
2013 | க்ளன் மேக்ஸ்வெல் (மும்பை) | ரூ.6.3 கோடி |
2012 | ரவீந்திர ஜடேஜா (சென்னை) | ரூ.12.8 கோடி |
2011 | கெளதம் கம்பூர் (கொல்கல்த்தா) | ரூ.14.9 கோடி |
2010 | ஷேன் பாண்ட் (KKR), பொலார்ட் (MI) | ரூ.4.8 கோடி |
2009 | கெவின் பீட்டர் (RCB), Andrew Flintoff (CSK) | ரூ.9.8 கோடி |
2008 | மஹிந்திர சிங் தோனி (சென்னை) | ரூ.9.5 கோடி |
2024- ம் ஆண்டு அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்
மிட்சல் ஸ்டார்க் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரூ.24.75 கோடி |
பாட் கம்மிங்ன்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ரூ.20.50 கோடி |
Daryl Mitchell | சென்னை சூப்பர் கிங்க்ஸ் | ரூ.14 கோடி |
ஹர்சால் படேல் | பஞ்சாப் கிங்க்ஸ் | ரூ.11.75 கோடி |
Alzzari Joseph | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | ரூ.11.50 கோடி |