IPL 2025: கோட்டைவிட்ட கொல்கத்தா... முதலிடத்தில் நீடிக்கும் குஜராத்! டெல்லியை பழிவாங்குமா லக்னோ!
IPL 2025:இன்று லக்னோவில் நடைப்பெறும் 40வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள்ன,

நேற்றைய போட்டி:
ஐபிஎல்-18 தொடரின் 39வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 52 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கே.கே.ஆர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக கொல்கத்தா அணி கேப்டன் அஜிங்க்யா ரஹானே 50 ரன்கள் எடுத்தார்.
மாற்றம் இல்லாத புள்ளிப்பட்டியல்:
நேற்றைய வெற்றிக்கு பிறகு குஜராத் டைடன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது, அதே போல கொல்கத்தா அணி தோற்று இருந்தாலும் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதே போல குஜராத் டைடன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிக ரன் அடித்த ஆரஞ்சு தொப்பியையும், அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான ஊதா தொப்பியை வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வசம் உள்ளது.
| இடம் | அணி | விளையாடியது | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | ரன் ரேட் | புள்ளிகள் |
| 1 | குஜராத் | 8 | 6 | 2 | 0 | 1.104 | 12 |
| 2 | டெல்லி | 7 | 5 | 2 | 0 | 0.589 | 10 |
| 3 | பெங்களூரு | 8 | 5 | 3 | 0 | 0.472 | 10 |
| 4 | பஞ்சாப் | 8 | 5 | 3 | 0 | 0.177 | 10 |
| 5 | லக்னோ | 8 | 5 | 3 | 0 | 0.88 | 10 |
| 6 | மும்பை | 8 | 4 | 4 | 0 | 0.483 | 8 |
| 7 | கொல்கத்தா | 8 | 3 | 5 | 0 | 0.212 | 6 |
| 8 | ராஜஸ்தான் | 7 | 2 | 5 | 0 | -0.714 | 4 |
| 9 | ஹைதராபாத் | 7 | 2 | 5 | 0 | -1.217 | 4 |
| 10 | சென்னை | 8 | 2 | 6 | 0 | -1.392 | 4 |
இன்றைய போட்டி:
இன்று லக்னோவில் நடைப்பெறும் 40வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள்ன, இவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் மோதியது, அந்த 2025 போட்டியில், அசுதோஷ் சர்மாவின் ஆட்டமிழக்காத அரைசதத்தின் உதவியுடன் டெல்லி அணி 19.3 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்விக்கு பிறகு டெல்லி அணி இன்றையப் போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது, மறுபுறம், ஜெய்ப்பூரில் நடந்த கடைசி போட்டியில் எல்எஸ்ஜி அணி ராஜஸ்தான் ராயல்ஸை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை அடைந்தது.
பிட்ச் ரிப்போர்ட்
இந்த வருடம் லக்னோவில் நடந்த நான்கு போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த வருடம் லக்னோவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 180. ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஐபிஎல் 2025 போட்டியில், எல்எஸ்ஜி 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, சிஎஸ்கே 19.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு எளிதாக துரத்தியது. அதனால் டாசில் வெற்றிப்பெறும் அணி சேசிங் செய்யவே விரும்பும்.
நேருக்கு நேர்:
மொத்தம்: 6
லக்னோ: 3 வெற்றி
டெல்லி கேபிடல்ஸ்: 3 வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் உத்தேச லெவன்:
ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (சி & டபிள்யூ.கே), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்
இம்பேக்ட் வீரர்கள் மயங்க் யாதவ்/பிரின்ஸ் யாதவ்/ஆகாஷ் தீப்
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்:
கருண் நாயர், அபிஷேக் போரல், கே.எல். ராகுல் (WK), அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், மோகித் சர்மா
இம்பேக்ட் வீரர்கள்: ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்/சமீர் ரிஸ்வி





















