கார் பந்தயத்தில் 2-ம் இடம் - அஜித் குமாரின் ரேஸிங் புகைப்படங்கள்!
பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
கார் பந்தயம் மீது நடிகர் அஜித் குமாருக்கு தீராக் காதல். சமீப காலமாக அஜித் குமார் ரேஸிங் என்ற அணியுடன் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார் அஜித் குமார்.
பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி பெரும் வெற்றி தந்தது. பந்தயத்திலும் அஜித் குமார் அணியின் வெற்றி தொடர்கிறது.
நடிகர் அஜித் குமார் இந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கியவர்.
அவருக்கு மோட்டர் ரேஸிங் மீது அவ்வளவு காதல். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, தேசிய பந்தய சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா, BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் ஆகிய பந்தையங்களில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார்.
பெல்ஜியம் நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற பந்தயத்தில் பங்கேற்றது.அஜித் குமாரின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளது. அதுவும் P2 podium finish என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் குமார் கார் பந்தயத்தில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.