ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையாளர்கள் யார் என்று பார்ப்போம்.
ஷேன் வாட்சன் 2018 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல இது உதவியது.
விருத்திமான் சஹா 2014 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அவரது அணி தோல்வியடைந்தது.
சாய் சுதர்சன் 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 96 ரன்கள் எடுத்தார்.
முரளி விஜய் 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 95 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது.
மணீஷ் பாண்டே 2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 94 ரன்கள் எடுத்தார். இது கேகேஆர் அணி இரண்டாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவியது.
மன்விந்தர் பிஸ்லா 2012 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்தார். இது கேகேஆர் அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவியது. இது அவரின் சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.
ஃபாஃப் டு பிளெசிஸ் 2021 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 86 ரன்கள் எடுத்தார்.
கிறிஸ் கெய்ல் 2011 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 76 ரன்கள் எடுத்தார்.