Dewald Brevis: இவர் பேபி ஏபிடி இல்ல பேபி ஃபாப்! Csk-வின் புதிய எல்லைச்சாமியான டிவால்ட் பிரெவிஸ்
Dewald Brevis: சென்னை அணிக்கு பேட்டிங்கில் மட்டுமில்லாமல் ஃபில்டிங்கிலும் அசத்தி வருகிறார் டிவால்ட் பிரெவிஸ்

இத்தனை நாளா நீ எங்க சாமி இருந்த என்று சிஎஸ்கே ரசிகர்கள் குஷியில் ஆழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய எல்லைச்சாமியாக மாறியுள்ளார் அதிரடி பேட்டர் டிவால்ட் பிரெவிஸ்.
சிஎஸ்கே:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 மறக்க கூடிய சீசனாக மாறியுள்ளது, சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே அணி தொடங்கினாலும் அதன் பின்னர் ஏற்ப்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆஃப் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. சிஎஸ்கே அணியின் நீண்ட நாள் ஃபார்மூலாவாக இருந்த அனுபவம் இந்த சீசனில் பலிக்காமல் போனது.
கேப்டன் ருதுராஜும் காயத்தால் விலக சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனார் எம்.எஸ் தோனி, ஆனால் அவரின் மந்திரமும் இந்த உடைந்த சிஎஸ்கே கப்பலை கரை சேர்க்க முடியவில்லை.
மாற்று வீரர்கள்:
சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக இரண்டு மூன்று வீரர்கள் வெளியேற மாற்றுவீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வந்ததிலிருந்து சென்னை அணி வேறு அணியாக மாறியுள்ளது.
டிவால்ட் பிரெவிஸ்:
முக்கியமாக சென்னை அணி புதிய எல்லைச்சாமியாக மாறியுள்ளார் டிவால்ட் பிரெவிஸ், சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் சுத்தமாக இண்டெண்ட் இல்லை என்று சொன்னதற்கு இந்த இண்டேண்ட் பொதுமா என்று கேட்கிற அளவுக்கு மிரட்டி எடுத்து வருகிறார் டிவால்ட் பிரெவிஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இறங்கிய முதல் போட்டியிலேயே தனது முத்திரையை பதித்தார் பிரெவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் என்று விளாசினார். அடுத்த நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான நிலையில் களமிறங்கி மிக முக்கியமான ரன்களை எடுத்தார்.
Dewald Brevis Sambhavam!🔥🔥🔥
— Vajrang 🦁 (@VajrangGadu) May 7, 2025
pic.twitter.com/NDKmByjhYu
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டக் அவுட்டானர். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி 61/5 என்று தத்தளித்து கொண்டு இருந்த போது சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டதும் மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணியை வெற்றிப்பக்கம் திருப்பினார். 25 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதில் வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசினார்.
பிரேவிஸ் ருத்ர தாண்டவம்#KKRvCSK #WhistlePodu #CSK #Chennaisuperkings #IPL2025 #DewaldBrevis #abpnadu #Brevis pic.twitter.com/htJ6xrYZRH
— ABP Nadu (@abpnadu) May 7, 2025
சென்னை அணிக்கு பேட்டிங்கில் மட்டுமில்லாமல் ஃபில்டிங்கிலும் அசத்தி வருகிறார் பிரெவிஸ் சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெசிஸ் முன்னர் என்ன செய்தரோ அதையை மீண்டும் பிரதிப்பலிக்கிறார் பிரெவில் இவரை பேபி ஏபிடி என்று ரசிகர்கள் கூறினாலும், உண்மையில் இவர் பேபி ஃபாப் டூ பிளெசிஸ் என்றே சொல்லலாம்.





















