IPL 2024 Tickets: ஆன்லைனில் மட்டுமே ஐ.பி.எல் டிக்கெட்! வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆன்லைனில் மட்டுமே ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
அதற்கான முக்கிய காரணம் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் தங்களுக்கு பிடித்த அணி வெற்றியுடன் போட்டியை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் கடந்த 16 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஆகியோர் தங்களது முதல் போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
ஆன்லைனில் மட்டுமே ஐ.பி.எல் டிக்கெட்:
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் எப்படி விற்பனையாகும் என்ற கேள்வி எழுந்தது. இச்சூழலில் தான் ஆன்லைனில் மட்டுமே ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், டிக்கெட் விற்பனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிக்கெட் பெறுவதற்காக மைதானத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் தான் ஐபிஎல் நிர்வாகம் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையடும் போட்டிகான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?