IPL 2024: மும்பையை அணியை முட்டிமோதுமா ஹைதராபாத் அணி..? பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்..? இன்று மோதல்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா இடையே போட்டி நிலவுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் 8வது போட்டியில் இன்று (மார்ச் 27) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணிகள் நேருக்குநேர் மோதுகின்றன. இந்த இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா இடையே போட்டி நிலவுகிறது.
முதல் வெற்றி யாருக்கு..?
இந்த சீசனில் மும்பை மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் இதுவரை தனது முதல் போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்தது. இன்று இந்த இரண்டு அணிகளுக்கும் இரண்டாவது போட்டியாகும். ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மும்பை இந்தியன் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பிட்ச் ரிப்போர்ட்:
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். கடைசியாக இங்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஒரு போட்டியில் மொத்தமாக 373 ரன்கள் குவித்தனர்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஹைதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக வெற்றிகளுடன் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 21 போட்டிகள் நடைபெற்றவுள்ள நிலையில், அதில் மும்பை அணி 12 வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி 9 வெற்றியை பெற்றுள்ளன. கடந்த 5 போட்டிகளின் முடிவுகளிலும் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடந்த 5 போட்டிகளில் மும்பை அணி 4 முறையும், ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை vs ஹைதராபாத் இதுவரை நேருக்குநேர்:
மொத்த போட்டிகள்: 21
மும்பை வெற்றி: 12
ஹைதராபாத் வெற்றி: 9
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா , இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (c), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது நபி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயங்க் அகர்வால் , ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத் , ஷாபாஸ் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் , மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
இரு அணிகளின் முழுமையான விவரம்:
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரிட் பும்ரா, லூக் வூட், நமன் திர், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால் , விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, ஷிவாலிக் ஷர்மா, அன்ஷுல் கம்போஜ், ஆகாஷ் மத்வால், நுவான் துஷாரா, குவேனா மபாகா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன், டிராவிஸ் ஹெட், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் , ஜெய்தேவ் உனத்கட், அன்மோல்ப்ரீத் சிங், உபேந்திர யாதவ், ஃபசல்ஹக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், ஜாதவேத் சுப்ரமணியன், சன்வீர் சிங், ஆகாஷ் மகாராஜ் சிங், நிதிஷ் ரெட்டி