IPL 2024: பெங்களூரு வெற்றியால் மாறிய புள்ளி பட்டியல் - யார் முதல் இடம் தெரியுமா?
IPL 2024 Points Table:
ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்றைய போட்டியில் நேருக்கு நேர் மோதின. ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் 2024ல் ஃபாப் டு பிளெசிஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அதே நேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மற்ற அணிகள் எப்படி..?
அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள அணிகள் அனைத்தும் தலா 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
இதைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிக்காக காத்திருக்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.
தரவரிசை | அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன் ரேட் |
1 | ஆர்.ஆர் | 1 | 1 | 0 | 2 | 1 |
2 | சிஎஸ்கே | 1 | 1 | 0 | 2 | 0.779 |
3 | ஜிடி | 1 | 1 | 0 | 2 | 0.3 |
4 | கே.கே.ஆர் | 1 | 1 | 0 | 2 | 0.2 |
5 | பி.கே.எஸ் | 2 | 1 | 1 | 2 | 0.025 |
6 | ஆர்சிபி | 2 | 1 | 1 | 2 | -0.18 |
7 | எஸ்.ஆர்.ஹெச் | 1 | 0 | 1 | 0 | -0.200 |
8 | எம்.ஐ | 1 | 0 | 1 | 0 | -0.300 |
9 | டி.சி | 1 | 0 | 1 | 0 | -0.455 |
10 | எல்.எஸ்.ஜி | 1 | 0 | 1 | 0 | -1 |
- ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.
- ஒரு போட்டி கைவிடப்பட்டாலோ அல்லது முன்கூட்டியே நிறுத்தப்பட்டாலோ, எந்த முடிவும் இல்லை எனில், ஒரு அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும்.
- தோல்வி ஏற்பட்டால் அந்த அணிக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது.
போட்டி சுருக்கம்:
முன்னதாக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ஷிகர் தவானின் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஷிகர் தவான் அதிகபட்சமாக 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணிக்காக முகமது சிராஜ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதுதவிர யாஷ் தயாள், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
THE MOST OUTRAGEOUS SHOT UNDER PRESSURE. 🤯
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
- Dinesh Karthik is here to stay...!!!pic.twitter.com/0es5Bdj7XP
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்காக இருந்தது. 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அதே சமயம் கடைசி ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ககிசோ ரபாடா மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 2 விக்கெட்களும், சாம் குர்ரன், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.