![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ritika Sajdeh: கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ’ஹிட் மேன்’ .. சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கத்தில் ஹார்ட்விட்ட ரோஹித் மனைவி
ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவும் இந்த முடிவு குறித்து முதல் முறையாக தனது பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
![Ritika Sajdeh: கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ’ஹிட் மேன்’ .. சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கத்தில் ஹார்ட்விட்ட ரோஹித் மனைவி IPL 2024 Rohit Sharma Wife Ritika Sajdeh First Reaction After Removal As Mumbai Indians Captain Ritika Sajdeh: கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ’ஹிட் மேன்’ .. சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கத்தில் ஹார்ட்விட்ட ரோஹித் மனைவி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/e00158451bbad3dd38438008a169bb1c1702792673925571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், ரோஹித் சர்மாவுக்கு உரிய பிரியாவிடை அல்லது மீண்டும் கேப்டன்சி பதவி கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றன.
ரோஹித் சர்மா தலைமையின் கீழ், ஐபிஎல் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உருவெடுத்தது. ரோஹித் சர்மா 11 சீசன்களில் மும்பை அணிக்கு தலைமை தாங்கி அதில், 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளது. ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சி பதவி கொடுக்காததற்கு பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவும் இந்த முடிவு குறித்து முதல் முறையாக தனது பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவை பற்றி ஒரு பதிவை பதிவிட்டு இருந்தது. அதில், 2013 முதல் 2023 வரை ரோஹித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் வீடியோ வடிவில் தோன்றின. போட்டிக்கு முன் இரு கேப்டன்களும் டாஸ் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. “ 2023-2023 பத்தாண்டு தைரியமான சவால்! உங்களுக்கு மிக்க மரியாதை. ரோஹித்!” இந்த பதிவிற்கு ரித்திகா சஜ்தே ஒரு மஞ்சள் இதய ஈமோஜியை பதிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன் என்று ரோஹித் சர்மா பலமுறை கூறியுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக விளையாடவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஹர்தி பாண்டியா முழு உடல் தகுதியுடன் இல்லை. அதன்பிறகு பும்ரா காயம் காரணமாக கடந்த 2 சீசன்களாக விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சரௌ பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தும், அவரும் காயம் காரணமாக அணியில் விளையாடாமல் தொடரில் இருந்து விலகினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏன் இவ்வளவு அவசரம்?
ரோஹித் சர்மா தானாக எதையாவது சொல்லும் வரை, மும்பை அணி சார்பில் என்ன சொல்லப்பட்டது என்பது நமக்கு தெரியாது. ரசிகர்கள் வைக்கும் ஒரே கேள்வி என்னவென்றால் ரோஹித் ஏன் தானாக பதவி விலகும் வரை காத்திருக்காமல், மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது என்று தெரிவித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று ஏற்கனவே இது போன்ற செய்திகள் வர ஆரம்பித்திருந்த நிலையில், அதேதான் நடந்தது, ஆனால் அவர் மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)