மேலும் அறிய

MI vs RR IPL 2024: "ஹர்திக்கிற்கு 50.. அஸ்வினுக்கு 200" ரசிகர்களே என்னனு தெரியுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டி அஸ்வினுக்கு 200வது போட்டியாகவும், ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக 50 வது போட்டியாகவும் அமைந்துள்ளது.

ஐ.பி.எல்:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 14 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வருகிறது. இதில் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. 

200 வது போட்டியில் அஸ்வின்:

இந்நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வின் விளையாடுவதன் மூலம் ஐ.பி.எல்-ல் தன்னுடைய 200 வது போட்டியில் களம் இறங்கி உள்ளார். அதன்படி, ஐ.பி.எல்லில் 200 வது போட்டியில் விளையாடும் 10 வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றிருக்கிறார். 37 வயதான அஸ்வின் முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐ.பி.எல்லின் 2 வது சீசனில் அறிமுகமானார். அந்த வகையில் இதுவரை அவர் விளையாடி உள்ள 199 போட்டிகளில் 743 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்வதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி இருக்கிறார்.  

அதேபோல் 2010 மற்றும் 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றார். மேலும்,  2018 மற்றும் 2019 இல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக பணியாற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி 287 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 253 போட்டிகளில் விளையாடி, அதில் 223 போட்டிகள் சிஎஸ்கேக்காக விளையாடியவர் என்ற சாதனையை எம்.எஸ் தோனி படைத்துள்ளார். 

தோனிக்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 245 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நான்காவது இடத்தில் விராட் கோலி 240 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா (229), ஷிகர் தவான் (220), சுரேஷ் ரெய்னா (205), ராபின் உத்தப்பா (205), அம்பதி ராயுடு (204) ஆகியோரும் ஐபிஎல் போட்டியில் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர்.  இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் ஐபிஎல்லில் 200 போட்டிகளில் விளையாடியதில்லை. 13 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் க்காக 189 ஆட்டங்களில் கீரன் பொல்லார்டு மட்டுமே விளையாடி இருக்கிறார். 

கேப்டனாக 50 வது மேட்சில் ஹர்திக் பாண்டியா:

கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. அந்த வகையில்  தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஐ.பி.எல் சீசனிலேயே அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதேபோல், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

இச்சூழலில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு வந்தார் ஹர்திக் பாண்டியா. இவ்வாறாக இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3 வது போட்டியில் களம் இறங்குவதன் மூலம் கேப்டனாக 50 வது போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget