MI vs RCB LIVE Score: சரணடைந்த பெங்களூரு.. இமாலய வெற்றியை பதிவு செய்த மும்பை!
IPL 2024 MI vs RCB LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 25வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எட்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை மொத்தம் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 14 முறை வெற்றியை தனதாக்கியுள்ளது. பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சொந்த மைதானத்தில் சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளிலும் வெளிமைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடி மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை நான்கு லீக் போட்டிகளில் விளையாடி, முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றிக்கணக்கை நடப்பு ஐபிஎல் தொடரில் தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது சொந்த மைதானம் என்பதுதான். மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக தனது சொந்த மைதானத்தில் களமிறங்கவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள சூர்யகுமார் யாதவ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி என்றால், மற்ற போட்டிகளைக் காட்டிலும் அதிரடியாக விளையாடுவார். கடந்த நடைபெற்ற லீக் போட்டியில் 35 பந்தில் 83 ரன்கள் குவித்து, 200 ரன்கள் இலக்கை 16.3 ஓவரில் மும்பை அணி எட்டுவதற்கு காரணமாக இருந்தார். இதனால் இந்த போட்டியில் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவ் மீது அதிக நம்பிக்கையுடனே இருப்பார்கள் எனலாம். சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல் நான்காவது போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தான் எதிர்கொண்ட முதல் பந்தை தூக்கி அடிக்க முயன்று டக் அவுட் ஆகி வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகியிருந்தாலும், தான் எதிர்கொண்ட முதல் பந்தை பேட்டில் விளாசி கேட்ச் ஆகி வெளியேறியதால், சூர்யகுமார் யாதவ் களத்தில் எவ்வளவு நேரம் இருக்கின்றாரோ அந்த அளவிற்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெளிவாகியுள்ளது.
MI vs RCB LIVE Score: சரணடைந்த பெங்களூரு.. இமாலய வெற்றியை பதிவு செய்த மும்பை!
மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
MI vs RCB LIVE Score: 17 பந்தில் 50 ரன்கள் விளாசிய சூர்யா!
சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் விளாசி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.




















