IPL KKR vs RCB LIVE: இறுதிவரை பரபரப்பு..1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி!
ஆர்.சி.பி. - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
LIVE
Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறப்பாக நடைபெற்று வரும் சூழலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கடந்த போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட முகமது சிராஜ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆர்.சி.பி. அணியில் இன்றும் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் கடும் வெயில் நிலவி வருவதால் முதலில் பந்துவீசுவதே சிறந்தது என்பதால் ஆர்.சி.பி. அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா அணியில் பிலிப் சால்ட், சுனில் நரைன், ரகுவன்ஷி, ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரஸல், ரிங்குசிங், ராமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளனர்.
பெங்களூர் அணியில் கேப்டன் டுப்ளிசிஸ், விராட் கோலி, வில் ஜேக்ஸ், ரஜத் படிதார். கிரீன், தினேஷ் கார்த்திக், லோம்ரார், கரண் சர்மா, பெர்குசன், யஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
IPL KKR vs RCB LIVE: 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வி!
கடைசி வரை போராடிய பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த வகையில் பெங்களூரு அணி மொத்தம் 221 ரன்கள் எடுத்து தோல்வி.
IPL KKR vs RCB LIVE: பிரபுதேசாய் அவுட்!
பெங்களூரு அணி வீரர் பிரபுதேசாய் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
IPL KKR vs RCB LIVE:17 ஓவர்கள் முடிந்தது!
17 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.
IPL KKR vs RCB LIVE: 16 ஓவர்கள் முடிந்தது!
16 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.
IPL KKR vs RCB LIVE: 15 ஓவர்கள் முடிந்தது!
15 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.