DC vs RR LIVE Score: ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி; ப்ளேஆஃப் ரேசில் தீவிரமாகும் போட்டி!
IPL 2024 DC vs RR LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE

Background
DC vs RR LIVE Score: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய டெல்லி!
புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றியும் 6இல் தோல்வியும் சந்தித்துள்ளது.
DC vs RR LIVE Score: ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி; ப்ளேஆஃப் ரேசில் தீவிரமாகும் போட்டி!
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
DC vs RR LIVE Score: வெற்றியை உறுதி செய்த டெல்லி!
20வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோமன் பவுல் தனது விக்கெட்டினை முகேஷ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் டெல்லி அணி தனது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
DC vs RR LIVE Score: அஸ்வின் அவுட்!
18வது ஓவரின் கடைசி பந்தை தூக்கி அடித்த அஸ்வின் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 3 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை குல்தீப் கைப்பற்றினார்.
DC vs RR LIVE Score: 6வது விக்கெட்டினை கைப்பற்றிய டெல்லி!
ராஜஸ்தான் அணியின் ஃபெரிரியா குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபள்யூ முறையில் இழந்து வெளியேறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

