IPL 2024 Auction LIVE: கோடிகளில் புரண்ட வீரர்கள்; விறுவிறுப்பில் கலைகட்டிய ஐபிஎல் மினி ஏலம் முடிந்தது
IPL 2024 Auction LIVE Updates: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்திற்கான உடனடி அப்டேட்களை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
IPL Auction 2024 LIVE Updates:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. பத்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியை பலமான அணியாக மாற்ற தயாராகி வருகின்றனர். ஏலம் எப்போது, எங்கு நடக்கின்றது என்பதையும், எப்படி நேரடியாக ஏலத்தினை பார்க்க முடியும் என்ற முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.
ஐபிஎல் 2024 ஏலம் எப்போது?
ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை துபாயில் கோகோ கோலா அரங்கில் நடைபெறும். நிகழ்ச்சி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு தொடங்கவுள்ளது
2024 ஐபிஎல் ஏலத்தைப் பார்ப்பது எப்படி?
ஐபிஎல் 2024 ஏலம் டிவி பார்வையாளர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. டிஜிட்டல் முறையில் ஏலத்தினை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் காணலாம்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள்?
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இதில் அதிகபட்சமாக 77 வீரர்களை மட்டும்தான் மொத்தமாக உள்ள 10 அணி உரிமையாளர்களால் ஏலம் கூறமுடியும். மொத்தம் ஏலம் கூறப்படவுள்ள 77 வீரர்களில் 30 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தமாக மொத்தம் களமிறங்கவுள்ள 333 வீரர்களில் 214 இந்திய வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவர் உட்பட 119 வெளிநாட்டு வீரர்கள். அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவருடன் 116 கேப்டு பிளேயர்களும், 215 அன் கேப் பிளேயர்களும் உள்ளனர்.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏலதாரர் யார்?
துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 ஏலத்திற்கான ஏலத்தில் மல்லிகா சாகர் இருப்பார்.
2024 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?
குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).
2024 ஐபிஎல் ஏலத்தில் இளைய மற்றும் வயதான வீரர்கள் யார்?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.
ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் மிகவும் வயதான வீரர் ஆவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் யாருக்கெல்லாம் குறி வைக்க வாய்ப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ. 31.4 கோடி உள்ளது. சென்னை அணி ஷர்துல் தாக்கூர், மணீஷ் பாண்டே, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை வாங்க ஆர்வம் காட்டலாம். குறிப்பாக ஷர்துல் தாக்குர் இதற்கு முன்பு சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய அனுபவம் உள்ளவர். இவருக்காக சென்னை அணி ரூபாய் 10 கோடி வரை செலவு செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சீசனில் கோப்பையை வென்ற கையுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த அம்பாத்தி ராயுடுவின் இடத்தினை நிரப்ப சென்னை அணி இந்திய வீரரை தேர்வு செய்ய நினைத்தால், அவர்களின் தேர்வாக மணீஷ் பாண்டே இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பந்து வீச்சினை இன்னும் பலப்படுத்த நினைத்தால் பெங்களூரு அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஜோஷ் ஹோசில்வுட்டை வாங்க சென்னை அணி வாங்க ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.
IPL 2024 Auction LIVE: முகமது நபியை வாங்கியது மும்பை
ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியை மும்பை அணி ரூபாய் 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
IPL 2024 Auction LIVE: லோக்கி ஃபெர்குஷனை வாங்கியது பெங்களூரு
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி லோக்கி ஃபெர்குஷனை வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 2 கோடி.
IPL 2024 Auction LIVE: அவ்னீஷ் ஆரவெல்லியை வாங்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்னீஷ் ஆரவெல்லியை 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
IPL 2024 Auction LIVE: முஜீப் உர் ரஹ்மானை வாங்கிய கொல்கத்தா
முஜீப் உர் ரஹ்மானை ரூபாய் 2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
IPL 2024 Auction LIVE: ரீலி ரோசோவை வாங்கியது பஞ்சாப்
பஞ்சாப் கிங்ஸ் அணி ரீலீ ரோசோவை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியது.