மேலும் அறிய

WTC Rohit: பேசாம.. ஐபிஎல்ல விட்டுடு ரோகித்.. நமக்கு இத விட முக்கியமானதெல்லாம் இருக்கு - சுனில் கவாஸ்கர்

WTC Rohit: கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறிய்யுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஷ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் அது குறித்து எனக்கு தெரியவில்லை. இப்படியான நேரத்தில் அவருக்கு ஓய்வு தேவை என நான் நினைக்கிறேன். மேலும், அவர் எடுத்துக்கொள்ளும் ஓய்வு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார்படுத்திடவும் உதவும். எனவே ரோகித் மூன்று முதல் நான்கு லீக் போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த வெற்றிகள் இந்த சீசனில் மிகவும் தடுமாறிக் கொண்டு இருக்கும் அணிகளான டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தலா ஒரு வெற்றியும், கொல்கத்தா அணிக்கு எதிராக நூலிழையிலும் வெற்றி பெற்றது.

இந்த மூன்று வெற்றிகளைத் தவிர தோல்வி அடைந்த போட்டிகள் அனைத்தும் மிக மோசமான தோல்விகள் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சுதான். இது அணியில் சக வீரராகவும் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவிற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.  பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதேபோல் சென்னைக்கு எதிரான போட்டியில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி சென்னை அணியை வான்கடேவில் வீழ்த்த முடியாமல் எடுபடாத பந்து வீச்சினால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 

அதேபோல் கடைசியாக நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இது மும்பை அணியின் பேட்டிங் குறித்த கேள்வியையும் எழுப்புகிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை வழநடத்தவுள்ள ரோகித் சர்மா கொஞ்ச காலம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

மேலும், அவர் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் மிகத் தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் மட்டும் தான் சாத்தியமாகும். ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சுதான் மிகவும் மோசமானதாகவும் மிகவும் அணிக்கு மிகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget