IPL 2023 : அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியல்.. முதலிடத்தில் பியூஸ் சாவ்லா.. அடுத்த இடத்தில் யார்..?
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை பியூஷ் சாவ்லா படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பங்கேற்ற 10 அணிகளுக்கு வெற்றியை இலக்காக மட்டுமே கொண்டு எதிரணியுடன் போராடி வருகின்றன.
தற்போது வரை டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் புள்ளி பட்டியலில் புள்ளிகளை பெறவில்லை. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளார்.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை பியூஷ் சாவ்லா படைத்துள்ளார். இதுவரை சாவ்லா 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 185 சிக்ஸர்களை தனது பந்துவீச்சில் விட்டுகொடுத்துள்ளார். தற்போது இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் உள்ளார். இவர் 182 சிக்ஸர்களை விட்டுகொடுத்துள்ளார். 180 சிக்ஸர்களை விட்டுகொடுத்து ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்திலும், 176 சிக்ஸர்கள் விட்டுகொடுத்து அமித் மிஸ்ரா நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள்:
- 185 - பியூஷ் சாவ்லா
- 182-யுஸ்வேந்திர சாஹல்
- 180- ரவீந்திர ஜடேஜா
- 176- அமித் மிஸ்ரா
- 173- ரவிசந்திரன் அஸ்வின்
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்:
- 357- கிறிஸ் கெயில்
- 251- ஏபி டி வில்லியர்ஸ்
- 247 - ரோகித் சர்மா
- 235- எம்.எஸ். தோனி
- 228- விராட் கோலி
- 223 - கிரன் பொல்லார்ட்
- 211 - டேவிட் வார்னர்
- 203 - சுரேஷ் ரெய்னா
- 190- ஷேன் வாட்சன்
- 182 - ராபின் உத்தப்பா
மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா அதிக சிக்ஸர்களை விட்டுகொடுத்தவர் என்ற மோசமான சாதனையை படைத்தாலும், இந்தாண்டு சிறப்பாகவே பந்துவீசி வருகிறார். அதேபோல், 4 ஓவர்கள் வீசி எதிரணியை ரன் அடிக்க விடாமல் திணறடிக்கிறார். ரோகித் சர்மா இந்தாண்டு பந்துவீச்சில் இந்தாண்டு பல இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ஜேசன் பெஹ்ரெண்ட்ரூப், ஹிரித்திக் ஷொகீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத்கான், மெரிடித், கேமரூன் கிரீன், அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோர் மும்மை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இதில், பியூஸ் சாவ்லா தவிர அனைவரும் இளம் வீரர்கள்.
இதில், கேமரூன் கிரீன் மற்றும் மெரிடித் தவிர அனைவரும் லட்சங்களில்தான் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர். கிரீன் ரூபாய் 17.50 கோடிக்கு மும்பை அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர்.
- அர்ஜூன் டெண்டுல்கர் – 30 லட்சம்
- ஹிரித்திக் ஷோகின் – 20 லட்சம்
- பியூஷ் சாவ்லா – 50 லட்சம்
- அர்ஷத் கான் – 20 லட்சம்
- மெரிடித் – 1.5 கோடி
ஆரம்பத்தில் வெற்றிக்காக திணறிய மும்பை அணி தற்போது 5 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது.