IPL 2023, LSG vs RCB: ஒரே போட்டியில் குவிந்த பல்வேறு சாதனைகள்.. அடித்து தூக்கிய லக்னோ-ஆர்சிபி போட்டி.. நீளும் லிஸ்ட்!
நேற்றைய போட்டியில் இந்த ஐபிஎல்-க்கான பல சாதனைகள் உருவாக்கப் பட்டுள்ளன. கிட்டத்தட்ட அதில் சிலவற்றை மற்றொரு வீரர் முறியடிப்பது கடினம் என்றே தோன்றவைக்கிறது, அந்த அசாத்திய சாதனைகள் பின்வருமாறு..
அனைவரது ஹார்ட்-பீட்டையும் எகிற வைத்து கடைசியில் ஆர்சிபி ஃபேன்ஸ் ஹர்ட்டை உடைத்த போட்டியாக அமைந்த நேற்றைய போட்டி. இந்த போட்டியில் ஐபிஎல்-க்கான பல சாதனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அதில் சிலவற்றை மற்றொரு வீரர் முறியடிப்பது கடினம் என்றே தோன்றவைக்கிறது, அந்த அசாத்திய சாதனைகள் பின்வருமாறு..
முதல் ஹிட்-விக்கெட்
மிகவும் அரிதாகக் காணப்படும் ஹிட் விக்கெட் முறையில் ஆயுஷ் பதோணி அவுட் ஆனார். வித்யாசமான ஷாட் ஆடி யார்கரை சிக்ஸருக்கு அனுப்ப, அந்த பந்து சிக்ஸ் போவதற்குள் பேட் ஸ்டம்பில் பட்டு பெயில் விழுந்தது. இந்த ஐபிஎல் போட்டியின் முதல் ஹிட் விக்கெட்டாக இது இருந்த நிலையில், ஒட்டுமொத்த ஐபிஎல்-இல் 15வது ஹிட் விக்கெட்டாக இது பதிவானது.
Longest six in IPL 2023.
— Johns. (@CricCrazyJohns) April 10, 2023
115 meter by Captain FAF. pic.twitter.com/4mUUdPclE5
தூரமான சிக்ஸர்
டு பிளஸிஸ் மைதானத்திற்கு வெளியே அடித்த சிக்ஸர் இந்த தொடரின் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸராக மாறியது. 116 மீட்டர்களை தொட்ட அந்த சிக்ஸரை இந்த ஐபிஎல்-இல் இதன்பிறகும் யாரும் திரும்ப அடிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட தொலைதூர சிக்ஸர் பட்டியலில் 16 வருடங்களாக அழிக்க முடியாமல் ஆல்பி மோர்க்கல் பெயர் உள்ளது. அவர் 125 மீட்டர் சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பின் 124 மீட்டர் சிக்ஸ் அடித்த பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் உள்ளார்.
அதிவேக அரை சதம்:
என்னதான் ஸ்டாய்னிஸ் ஒரு அதிரடி இன்னிங்ஸ் ஆடி சென்றிருந்தாலும், இலக்கு பெரிது என்பதால், அதுவும் போதாமல் 45 பந்துகளுக்கு 95 ரன் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது அடிக்க தொடங்கிய பூரான் தொட்ட பந்தெல்லாம் பவுண்டரிக்கு வெளியேதான். வெறும் 15 பந்துகளில் அரை சதம் எட்டி இந்த சீசனில் இதுவரை வேகமான அரை சாதமாக பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட இதுவே கடைசி வரை முன்னணியில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 19 பந்துகள் சந்தித்த அவர் 11 பந்துகளை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியுள்ளார். அதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். 326 ஸ்ட்ரைக் ரேட்டில் வீடியோ கேம் போன்ற இன்னிங்ஸை ஆடி ஆட்டத்தை கையில் எடுத்து கொடுத்தார்.
Just witness a murder 💀🤯
— VECTOR⁴⁵🕉️ (@Vector_45R) April 10, 2023
The madness of Nicholas Pooran 😯
0,6,0,0,4,6,6,1,6,1,4,6,4,1,6,4,1,6,W.#RCBvLSG pic.twitter.com/JyKxIPUeaf
100 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல்
இந்த சீசன் ஹர்ஷல் பட்டேலுக்கு சுமாராக அமைந்திருந்தாலும், அவரது முந்தைய ஃபார்மை நாம் மறந்துவிடக்கூடாது. அதுவே அவருக்கு தற்போது இந்த சாதனையை கொண்டு வந்து தந்திருக்கிறது. இரண்டு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஜியோ சினிமாவில் அதிக பார்வையாளர்கள்
முதன்முறையாய இந்த சீசன் ஐபிஎல்-ஐ டிஜிட்டலில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா ஆப், மும்பை சென்னை ஆடிய போட்டியில் எட்டாத உயரம், தோனி பேட்டிங் ஆடும்போது எட்டாத உயரம், மேக்ஸ்வெல் - டு பிளஸிஸ் ஆடும்போது எட்டியுள்ளது. 1.8 கோடி பேர் ஒரே நேரத்தில் அந்த போட்டியை கண்டதாக ஆப்-இல் காண்பித்தது. இதுவரை ஜியோ சினிமாவில் இதுவே அதிகபட்சம்.