IPL Points table: பூரன் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்
நிகோலஸ் பூரானின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி, லக்னோ அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நிகோலஸ் பூரானின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி, லக்னோ அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் சீசன்:
16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதோடு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
நேற்றைய போட்டி:
பெங்களூரு அணிக்கு எதிராக 213 ரன்கள் என்ற இமாலய நோக்கி களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் தட்டு தடுமாறியது. ஆனால், பூரான் மற்றும் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தோடு, ஆயுஷ் பதோனியின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி ஆகும். இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.
புள்ளிப்பட்டியல்
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
லக்னோ | 4 | 3 | 1 | 6 |
ராஜஸ்தான் | 3 | 2 | 1 | 4 |
கொல்கத்தா | 3 | 2 | 1 | 4 |
குஜராத் | 3 | 2 | 1 | 4 |
சென்னை | 3 | 2 | 1 | 4 |
பஞ்சாப் | 3 | 2 | 1 | 4 |
பெங்களூரு | 3 | 1 | 2 | 2 |
ஐதராபாத் | 3 | 1 | 2 | 2 |
மும்பை | 2 | 0 | 2 | 0 |
டெல்லி | 3 | 0 | 3 | 0 |
முதல் நான்கு இடங்களில் யார்?
லக்னோ அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், ராஜஸ்தான், கொல்கத்தா, மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி, தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இரண்டு முதல் நான்காவது இடங்களை பிடித்துள்ளன. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6வது இடங்களில் உள்ளன. பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 8வது இடங்களை ஆக்கிரமித்துள்ளன. மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும், டெல்லி அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை கண்டு, முறையே கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இன்றைய போட்டி:
டெல்லியில் இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியை, வார்னர் தலைமையிலான டெல்லி அணி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்த சூழலில், அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், இரண்டில் ஏதேனும் ஒரு அணி நிச்சயம் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கை தொடங்க உள்ளது. இந்த போட்டியின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.