IPL 2023: இவங்க தான் ப்ளேஆஃப் போவாங்க.. ஹர்பஜன் சிங் சொல்லும் கிரிக்கெட் ஜோசியம்..!
IPL 2023: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப்க்கு முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.
IPL 2023: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்தெந்த அணிகள் ப்ளேஆஃப்க்கு முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதி ஆட்டங்களை முடித்து விட்டது. இதனால் புள்ளிப்பட்டியலில் நடப்புச் சம்பியன் குஜராத் அணி முதல் இடத்திலும், தலா மூன்று வெற்றிகளுடன் ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகள் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
மொத்தம் 10 அணிகள் உள்ள இந்த போட்டித் தொடரில் அடுத்த சுற்றுக்கு 4 அணிகள் தான் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தனது அனுபவத்தில் இருந்து கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவையெவை என குறிப்பிட்டுள்ளார். அதில், நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என இவை நான்கும் தான் ப்ளேஆஃப்க்கு முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவரது கணிப்பில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.
இவரது கணிப்பில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளில் குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதன் பின்னர் அவர் கூறிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணி 10 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியும் 4இல் தோல்வியும் சந்தித்து ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன் பின்னர் அவர் கூறியுள்ள அணி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை 9 போட்டிகளில் வென்றுள்ள மும்பை அணி 5 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியைச் சந்தித்தும் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதன் பின்னர் இவரது கணிப்பில் இறுதியாக இடம் பிடித்த அணி பெங்களூரு. இந்த அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியும் 4இல் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனாலும் 10 புள்ளிகளுடன் இந்த அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஹர்பஜன் சிங் கணிப்பில் உள்ள நான்கு அணிகளும் மிகவும் பலமான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடரில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.