மேலும் அறிய

IPL 2023: காயத்தால் விலகும் முகேஷ் சவுத்ரி..? சி.எஸ்.கே. அணிக்கு பெரும் பின்னடைவு..!

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி, முதுகு வலி காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு பல வீரர்கள் காயம் காரணமாக விலகுவது அடிக்கடி நம் காதுகளில் வந்து விழுகின்றது. 

சென்னைக்கு பின்னடைவு:

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஒரு பெரிய அடி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி, முதுகு வலி காரணமாக இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. 

கடந்த 2022 ஐபிஎல் சீசனில், தீபக் சாஹர் இல்லாத நேரத்தில் முகேஷ் சவுத்ரி, முதன்மை பந்துவீச்சாளராக பந்துவீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இந்த சூழலில் முகேஷ் விளையாடுவார் என்ற நம்பிக்கை இல்லை என சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கிரிக்பஸ்ஸுக்கு (ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனம்) தகவல் தெரிவித்துள்ளார். 

துரதிஷ்டவசம்:

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முகேஷுக்காக நாங்கள் நிச்சயமாக காத்திருக்கிறோம், ஆனால் அவர் இந்த சீசனில் விளையாடுவார் என்று எங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவர் கடந்த சீசனில் எங்கள் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார், மேலும் இந்த சீசனில் அவர் விளையாடாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ):

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக முகேஷ் சவுத்ரி தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான முகேஷ் சவுத்ரி 13 போட்டிகளில் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் போது முகேஷ் ஒரு போட்டியில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 31-ம் தேதி விளையாட உள்ளது.

மோஷின் கான்:

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மோஷின் கான் (24), கடந்த சீசனில் ஒன்பது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை 6க்கும் குறைவான எகானமி விகிதத்துடன் (5.97) கைப்பற்றினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது முதல் சீசனில் பிளே-ஆஃப்களுக்குச் சென்ற நட்சத்திர வீரர்களில் இவரும் ஒருவர். பஞ்சாப் கிங்ஸ் (3/24) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (4/16) ஆகியவற்றுக்கு எதிரான தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டெல்லி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் லக்னோ அணி பிளே ஆப்பில் ஏற்றம் கண்டது. அந்த போட்டியில் அவருக்கு MoM விருதைப் பெற்றுத் தந்தது.

லக்னோ அணிக்காக இந்த  சீசனின் மோஷின் கான் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், காயம் காரணமாக லக்னோ நிர்வாகம் அவரை களத்தில் இறக்குமா?  இல்லையா? என்பது குறித்து வரும் போட்டிகளில்தான் தெரியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget