MI csk, IPL 2023: சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயீனுக்கு வாய்ப்பு இல்லை.. மும்பையில் யார் உள்ளே? யார் வெளியே?
ஐபிஎல் வரலாற்றில் நடக்கும் ஆயிரமாவது போட்டியில் மோதும் சென்னை மற்றும் மும்பை அணிகளின் சார்பில், விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்
ஐபிஎல் வரலாற்றில் நடக்கும் ஆயிரமாவது போட்டியில் மோதும் சென்னை மற்றும் மும்பை அணிகளின் சார்பில், விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்
சென்னை - மும்பை மோதல்:
ஐபிஎல் சீசனின் 12 வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. சென்னை அணி தான் விளையாடிய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரவும், மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதோடு, ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் வென்று வரலாற்றில் இடம்பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சென்னை அணியின் பிளேயிங் லெவன்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ரகானே, பிரெடோரியஸ், சிசந்தா மகலா, துஷர் பாண்டே
சென்னை அணியின் இம்பேக்ட் பிளேயர்ஸ்:
அம்பத்தி ராயுடு, ஆகாஷ் சிங், சேனாபதி, ஷைக் ரஷீத், ஆர்எஸ் ஹங்கர்கேகர்
மும்பை அணியின் பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, பெஹ்ரெண்ட்ரோப், அர்ஷத் கான்
மும்பை அணியின் இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ரமன்தீப் சிங், சந்தீப் வாரியர், அர்ஜுன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, நேஹல் வதேரா
நேருக்கு நேர்:
மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி, ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இந்த இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை வான்கடே மைதானம்:
வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதிலும் 7 வெற்றியுடன் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் சென்னைக்கு எதிரான போட்டிகளில் மும்பை 70% வெற்றி சாதனை படைத்துள்ளது.
விளையாடிய போட்டிகள் - 10
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 7
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 3
முடிவு இல்லாத போட்டிகள் - 0
கடந்த 5 மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகள்:
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதில், கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் கடைசி பந்தில் கிடைத்தது.