IPL CSK Match Ticket: ரசிகர்களே கிளம்புங்க... இன்னும் சற்று நேரத்தில் சி.எஸ்.கே. போட்டிக்கான டிக்கெட் விற்பனை..! எங்கு? எவ்வளவு?
சென்னையில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி லக்னோ அணியுடன் சி.எஸ்.கே. மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் தொடராக ஐ,பி.எல். அமைந்துள்ளது. கொரோனா தொற்றிற்கு பிறகு பல அணிகளின் சொந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடர் மீண்டும் அந்தந்த அணிகள் சொந்த மைதானத்தில் ஆடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை
நடப்பு ஐ.பி.எல். தொடர் வரும் 31-ந் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தன்னுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்காக நடப்பு தொடரில் களமிறங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலே குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்குகிறது.
இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி லக்னோவுடன் மோதுகிறது. 3 ஆண்டுகளுக்கு சென்னையில் போட்டி நடைபெறுவதால் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், 3-ந் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
டிக்கெட் எவ்வளவு?
டிக்கெட்டுகள் ரூபாய் 1500, ரூபாய் 2000, ரூபாய் 2,500 மற்றும் ரூபாய் 3000 ஆகிய தொகைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
- ரூபாய் 1500 டிக்கெட் வாங்கினால் கேலரி C/D/E Lower ல் அமர்ந்து பார்க்கலாம்
- ரூபாய் 2000 டிக்கெட் வாங்கினால் கேலரி I/J/K Upper –ல் அமர்ந்து பாரக்கலாம்.
- ரூபாய் 2500க்கு டிக்கெட் வாங்கினால் I/J/K/ Lower-ல் அமர்ந்து பார்க்கலாம்.
- ரூபாய் 3000க்கு டிக்கெட் வாங்கினால் கேலரி D/E Upper-ல் அமர்ந்து பார்க்கலாம்.
மேற்கண்ட டிக்கெட்டுகளில் கேலரி D/E Upperல் அமர்ந்து பார்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் பெற முடியும். ரூபாய் 1500 டிக்கெட்டுகளை நேரடியாக கவுண்டருக்கு சென்றுதான் வாங்க முடியும். ரூபாய் 2 ஆயிரம் மற்றும் ரூபாய் 2 ஆயிரத்து 500 டிக்கெட்டுகளை நேரடியாக மட்டுமின்றி இணையதளம் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.
டிக்கெட்டுகள் விற்பனை இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டிக்கெட்டுகள் வாங்க வரிசையில் நிற்பதற்காக கம்புகள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனையானது காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. டிக்கெட் விற்பனைக்காக சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டு, அதில் பேடிம் உள்பட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியின் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் காண்பதற்காக ரசிகர்கள் திரளாக வர ஆசைப்படுவார்கள் என்பதால், இன்று டிக்கெட்டுகளை நேரில் வாங்க குவிவார்கள். இதனால், சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: WPL Season 1 Winner: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கோப்பையை வென்று வரலாறு படைத்த மும்பை..!
மேலும் படிக்க: SA vs WI: ”யார் ஏரியலா யார் சீன போட்றது”.. மே.தீவுகளை ஓடவிட்டு அடித்து வரலாற்று வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா