IPL 2023 Retention: ஜடேஜா தக்கவைப்பு; பிராவோ விடுவிப்பு - பட்டியலை வெளியிட்ட சிஎஸ்கே...!
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார்.
![IPL 2023 Retention: ஜடேஜா தக்கவைப்பு; பிராவோ விடுவிப்பு - பட்டியலை வெளியிட்ட சிஎஸ்கே...! IPL 2023 Retention CSK Dwayne Bravo Released by Chennai Super Kings Indian Premier League IPL 2023 Retention: ஜடேஜா தக்கவைப்பு; பிராவோ விடுவிப்பு - பட்டியலை வெளியிட்ட சிஎஸ்கே...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/15/c6daf9355cc6eacfca20b96702cf9adf1668517810085588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் (IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜொலிக்கும் ஆல்-ரவுண்டரான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸின் தவிர்க்க முடியாத வீரராகத் திகழ்ந்து வந்தார்.
2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த ஆண்டு 16வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. முதல் மூன்று சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் பிராவோ. 2011 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார். 2012 ஐபிஎல் சீசனில் பிராவோ மிகச் சிறப்பாக விளையாடினார். அந்த சீசனில் 461 ரன்களை விளாசினார் பிராவோ.
2013 ஐபிஎல் சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 2015 ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப்பை மீண்டும் கைப்பற்றினார்.
சிஎஸ்கே இரண்டு ஆண்டுகள் தற்காலிக தடையில் இருந்தபோது பிராவோ குஜராத் லயன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 2018 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்டார்.
2019ஆம் ஆண்டும் சிஎஸ்கே நிர்வாகத்தில் அவர் தக்கவைக்கப்பட்டார். 2022 ஐபிஎல் ஏலத்தில் டுவைன் பிராவோ ரூ.4.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.
Ben Stokes: உலக கோப்பைதான் இலக்கு; பென் ஸ்டோக்ஸின் பவர்ஃபுல் மூவ் இதுதான்..!
சிஎஸ்கே அணி நிர்வாகம் விடுவித்த வீரர்கள் லிஸ்ட்
- டுவைன் பிராவோ
- ஆடம் மில்னே
- கிறிஸ் ஜோர்டான்
- என்.ஜெகதீசன்
- சி.ஹரி நிஷாந்த்
- கே.பகத் வர்மா
- கே.எம்.ஆசிஃப்
- ராபின் உத்தப்பா (ஓய்வுபெற்றுவிட்டார்)
Sending all the Yellove! We will cherish the moments we whistled as you roared in the middle! We Yellove You, Singams! 🦁💛#WhistlePoduForever
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
தக்க வைக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்
- எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
- ரவீந்திர ஜடேஜா
- கான்வே
- மொயீன் அலி
- ருதுராஜ் கெய்க்வாட்
- சிவம் துபே
- அம்பதி ராயுடு
- டுவைன் பிரிடோரியஸ்
- மஹீஷ் தீக்ஷனா
- பிரசாந்த் சோலங்கி
- தீபக் சாஹர்
- முகேஷ் செளதரி
- சிமர்ஜீத் சிங்
- துஷார் தேஷ்பாண்டே
- ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
- மிட்செல் சான்ட்னர்
- மதீஷா பதிரானா
- சுப்ரன்ஷு சேனாபதி
- ராபின் உத்தப்பா இந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)