Akash Singh Profile: வெளியேறிய முகேஷ் சவுத்ரி.. இளம் வேகத்தை அதிவேகமாக எடுத்த சிஎஸ்கே.. யார் இந்த ஆகாஷ் சிங்..?
முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை அணியில் சேர்த்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) தொடர் தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தவித்து வந்தார். இதனால் ஒட்டுமொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை அணியில் சேர்த்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.
யார் இந்த ஆகாஷ் சிங்..?
20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் கடந்த 2020ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை அணியில் ஒரு பகுதியாக இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வாங்கியது.
Welcome Akash😼pic.twitter.com/6I0uHgVnER
— Sujal (@Sujal_Pandey07) March 30, 2023
ஆகாஷ் சிங் இதுவரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 9 டி20 போட்டிகளில் விளையாடி 34.85 சராசரியுடன் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், தனது மாநிலமான நாகலாந்து அணிக்காக 9 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 5 முதல் தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஆகாஷ் சிங்கை சென்னை அணியை எடுத்ததை தொடர்ந்து அவரது வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றன. அதில், ஆகாஷ் சிங் தனது வேகம் மற்றும் ஸ்விங்கால் எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது.
Welcome super king 💛 pic.twitter.com/zPjAwFl6ns
— TeamMSDian (@teamcsk01) March 30, 2023
சென்னை VS குஜராத்:
இந்த சீசனின் முதல் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, பென் ஸ்டோக்ஸ், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிவம் துபே, அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சலங்கி, தீபக் சாஹர், பிரய்ஷண் சஹர், மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், மஹீஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா, ஆகாஷ் சிங்.