Dhawan IPL Record: 200-வது இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்த கப்பர் ஷிகர் தவான்..!
ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் இன்று தன்னுடைய 200ஆவது இன்னிங்ஸில் விளையாடுகிறார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சென்னை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் ஷிகர் தவான் 2 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி மட்டும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 6000 ரன்களை கடந்துள்ளார்.
Milestone 🚨 - 6000 IPL runs and counting for @SDhawan25 👏👏
— IndianPremierLeague (@IPL) April 25, 2022
He is only the second player to achieve this feat in IPL.#TATAIPL #PBKSvCSK pic.twitter.com/G4Eq1t88Dx
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
விராட் கோலி (215இன்னிங்ஸ்)- 6402
ஷிகர் தவான் (200இன்னிங்ஸ்)- 6005*
ரோகித் சர்மா 221(இன்னிங்ஸ்)- 5764
டேவிட் வார்னர்(155 இன்னிங்ஸ்)-5663
சுரேஷ் ரெய்னா (205 இன்னிங்ஸ்)-5528
இவை தவிர டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஷிகர் தவான் முன்னேறியுள்ளார். இவர் தற்போது வரை 9004* ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதிக டி20 ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர்கள்:
விராட் கோலி- 10392 ரன்கள்
ரோகித் சர்மா- 10048 ரன்கள்
ஷிகர் தவான்- 9004* ரன்கள்
இந்தப் பட்டியலிலும் ஷிகர் தவான் சற்று முன்னேறியுள்ளார். சற்று முன்பு வரை பஞ்சாப் அணி 7 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: CSK Vs PBKS, IPL 2022 Live: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி : சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்