RCB vs RR: ஈசாலா கப் நமதே நிறைவேறுமா?.. இறுதி போட்டிக்கு முன்னேறுமா ஆர்சிபி- ராஜஸ்தான் உடன் மோதல் !
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் அடைந்த வெற்றியுடன் வருகிறது. ஆர்சிபி அணியின் ராஜாட் பட்டிதார் கடந்த போட்டியில் சதம் கடந்து அசத்தினார். எனினும் கேப்டன் டூபிளசில் கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். விராட் கோலியும் டூபிளசிஸ் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை இன்றைய போட்டியில் தருவார்கள் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
𝗢𝗡𝗘 𝗠𝘂𝘁𝗵𝗼𝗼𝘁 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗗𝗮𝘆 📸
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 27, 2022
Headed to the Narendra Modi Stadium for the showdown against RR. 💪🏻😎@MuthootIndia #WeAreChallengers #IPL2022 #Mission2022 #ನಮ್ಮRCB #RRvRCB #PlayOffs pic.twitter.com/24m6TbH1mD
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான்ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 25 முறை மோதியுள்ளன. அவற்றில் ஆர்சிபி அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 5 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. அவற்றில் ராஜஸ்தான் ஒரு முறையும், ஆர்சிபி அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது வரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 718 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரும் 421 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் சாஹல் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் ராஜஸ்தான் அணி சம பலத்துடன் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்