PBKS vs RR: பெர்ஸ்டோவ் அதிரடி. சாஹல் அசத்தல் பந்துவீச்சு..- பஞ்சாப் அணி 189 ரன்கள் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 189 ரன்களை எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தவான் மற்றும் பெர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
5 ஓவர்களில் பஞ்சாப் அணி 47 ரன்கள் எடுத்தது. அப்போது 6வது ஓவரை வீசிய அஷ்வின் முதல் பந்தில் ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்தார். அதைத் தொடர்ந்து வந்த பனுகா ராஜபக்ச பெர்ஸ்டோவ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 10 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 88 ரன்கள் எடுத்தது.
Innings Break! @yuzi_chahal scalped three wickets for @rajasthanroyals. 👍 👍@jbairstow21's half-century & a 38*-run cameo from @jitshsharma_ powered @PunjabKingsIPL to 189/5. 👌 👌
— IndianPremierLeague (@IPL) May 7, 2022
The #RR chase to begin soon.
Scorecard ▶️ https://t.co/Oj5tAfX0LP #TATAIPL | #PBKSvRR pic.twitter.com/unFqbmnR14
பனுகா ராஜ்பக்ச 18 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 27 ரன்கள் எடுத்திருந்தப் போது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த பெர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அசத்தினார். 15வது ஓவரை வீசிய சாஹல் முதலாக பஞ்சாப் கேப்டன் மயாங்க் அகர்வால் விக்கெட்டை எடுத்தார். அதன்பின்னர் பெர்ஸ்டோவ் 40 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகள் விளாசி 56 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி சாஹல் அசத்தினார். மேலும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி ஒரு தொடரில் 21 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
15 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 14 பந்துகளில் 22 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரும் ஜித்தேஷ் சேர்ந்து 5வது விக்கெட்டிற்கு 50 ரன்கள் வேகமாக சேர்த்தனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

