DC vs KKR: பந்துவீச்சில் அசத்திய குல்தீப்.. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நிதிஷ் ரானா-கேகேஆர் 146 ரன்கள் குவிப்பு !
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 146 ரன்கள் எடுத்துள்ளது.
![DC vs KKR: பந்துவீச்சில் அசத்திய குல்தீப்.. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நிதிஷ் ரானா-கேகேஆர் 146 ரன்கள் குவிப்பு ! IPL 2022: Kolkatta Knight Riders set 147 runs as target Delhi Capitals to win their league match at Wankhade DC vs KKR: பந்துவீச்சில் அசத்திய குல்தீப்.. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நிதிஷ் ரானா-கேகேஆர் 146 ரன்கள் குவிப்பு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/65b5bc0ab14ff0924957e6a32a8ffcd1_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்சு 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 8ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் இரண்டாவது பாபா இந்தர்ஜீத் விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் சுனில் நரேனின் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தது.
2000 runs and counting for @NitishRana_27 in the IPL 👌👌#TATAIPL #DCvKKR pic.twitter.com/Q4lm37cmaJ
— IndianPremierLeague (@IPL) April 28, 2022
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ரஸல் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ரானா 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் அவர் ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்களையும் இன்று கடந்து அசத்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2 ரன் விட்டு கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு146 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா 34 பந்துகளில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார். முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)