Kevin Pietersen Tweet: ”உலகில் சிறந்த உபசரிப்பு....” ஹிந்தியில் புதிய அறிவிப்பை வெளியிட்ட பீட்டர்சன்.. என்ன சேதி?
பயோ பபிள் முறையில் நடந்து வரும் 2022 ஐபிஎல் தொடரில் அணி வீரர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
![Kevin Pietersen Tweet: ”உலகில் சிறந்த உபசரிப்பு....” ஹிந்தியில் புதிய அறிவிப்பை வெளியிட்ட பீட்டர்சன்.. என்ன சேதி? IPL 2022 Kevin Pietersen England Cricketer Tweets in Hindi, Very excited to be back in India to do commentary on IPL Kevin Pietersen Tweet: ”உலகில் சிறந்த உபசரிப்பு....” ஹிந்தியில் புதிய அறிவிப்பை வெளியிட்ட பீட்டர்சன்.. என்ன சேதி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/d1de9f7fb47b98153c2013904ce7c6f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற அணிகள் அனைத்தும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளன. மற்ற ஐபிஎல் தொடரை போல் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாக உள்ளதாக டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் வர்ணணையாளராக இருப்பவர் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வர்ணணையாளராக இன்னும் அவர் பங்கேற்காத நிலையில், இப்போது இந்தியா வந்து கொண்டிருக்கிறார் அவர். இதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தில், இந்தியில் கேப்ஷன் எழுதி இருக்கிறார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
आईपीएल पर कमेंट्री करने के लिए भारत लौटने को लेकर बेहद उत्साहित हूं। दुनिया में सबसे अच्छे आतिथ्य का अनुभव करना कुछ ऐसा है जिसे मैं कभी भी हल्के में नहीं लूंगा! कुछ घंटों में मिलते हैं, भारत! 🙏🏽 pic.twitter.com/PzlZl4vIWS
— Kevin Pietersen🦏 (@KP24) April 18, 2022
அவர் பகிர்ந்திருக்கும் ட்வீட்டில், “மீண்டும் இந்தியா வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகின் சிறந்த உபசரிப்பை வழங்கும் இந்தியாவுக்கு வருவதை நான் எளிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இன்னும் சில மணி நேரங்களில் நான் இந்தியாவில்...” என பதிவிட்டிருக்கிறார்.
இந்தநிலையில், கடந்த வாரம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது டெல்லி அணியில் குறைந்தது இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயோ பபிள் முறையில் நடந்து வரும் 2022 ஐபிஎல் தொடரில் அணி வீரர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், பாதுகாப்பான முறையில் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு இல்லையென்றாலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)