DC vs KKR: கொரோனா தொற்றிலிருந்து மீண்ட வீரர்கள்.. இன்று புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
![DC vs KKR: கொரோனா தொற்றிலிருந்து மீண்ட வீரர்கள்.. இன்று புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி IPL 2022: Delhi capitals team will wear new Rainbow color jersey for tonight league game against Kolkatta Knight Riders DC vs KKR: கொரோனா தொற்றிலிருந்து மீண்ட வீரர்கள்.. இன்று புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/2551bedd7e6ea0c4976ea8fc6ae451d2_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பை வான்கடேவில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் இந்த தொடரின் தொடக்கத்தில் வலுவாக இருந்தாலும் கடைசியாக ஆடிய போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வியை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது. ரெயின்போ நிற ஜெர்ஸியை டெல்லி அணி இன்றைய போட்டியில் அணிந்து விளையாட உள்ளது. இது தொடரபான அறிவிப்பை டெல்லி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Which 1⃣1⃣ DC stars will don the special kit and take on the Knights 🤔
— Delhi Capitals (@DelhiCapitals) April 28, 2022
Get predicting NOW 💬#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvKKR#TATAIPL | #IPL | #DelhiCapitals | @JSWPaints pic.twitter.com/EIFxrfF1sa
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கும் இடையே இதுவரை 31 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. கொல்கத்தா அணி 16 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லிக்காக அதிகபட்சமாக ஷிகர்தவான் 810 ரன்களையும், கொல்கத்தா அணிக்காக கவுதம் கம்பீர் 413 ரன்களையும் குவித்துள்ளனர்.
Your #DCvKKR Gameday Programme is here 🗞️
— Delhi Capitals (@DelhiCapitals) April 28, 2022
All the important facts, stats and who said what, in one place for you 🔢#YehHaiNayiDilli | #IPL2022#TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/aa714EMBzs
டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி அணியில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்த மிட்சல் மார்ஷ் நலம் பெற்று மீண்டும் பயிற்சியில் இறங்கியுள்ளார். அதேபோல் தன்னுடைய குடும்ப நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் டெல்லி அணி மீண்டும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:சின்னக்கவுண்டர் படத்தின் பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)