மேலும் அறிய

IPL 2022: ஐபிஎல் 2022 குரூப் சுற்று போட்டிகள் எங்கே நடைபெறும்? பதிலளித்த சவுரவ் கங்குலி..

ஐபிஎல் தொடரின் குரூப் சுற்று போட்டிகள் எங்கே நடைபெறும் என்பது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர். இந்த முறை 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும். குரூப் சுற்று போட்டிகள் மகாராஷ்டிராவில் நடைபெறும். அங்கு மும்பை மற்றும் பூனேவில் இந்தப் போட்டிகள் நடைபெறும். நாக்அவுட் சுற்று போட்டிகள் எங்கு நடத்துவது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவேளை மீண்டும் அதிகமானால் வேறு எங்காவது நடத்துவது பற்றி யோசிக்கலாம். தற்போதைக்கு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும்” எனக் கூறியுள்ளார். 

IPL 2022: ஐபிஎல் 2022 குரூப் சுற்று போட்டிகள் எங்கே நடைபெறும்? பதிலளித்த சவுரவ் கங்குலி..

ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் மும்பையின் வான்கடே மற்றும் பாராபோர்ன் மைதானங்கள் மற்றும் புனேவின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் எம்சிஏ மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் மைதானங்கள் தொடர்பாக பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதால் ஐபிஎல் தொடர் குரூப் சுற்று முறையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் யுஏஇயில் நடைபெற்றது. அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் அந்தத் தொடரின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இம்முறை புதிதாக இரண்டு அணிகள் களமிறங்க உள்ளதால் 2022 ஐபிஎல் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க: U -19 உலகப்கோப்பை தொடர் : ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது இந்தியா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget