KKR vs PBKS: தமிழக வீரர் ஷாரூக்கானின் ஃபினிஷிங் சிக்சரால் பஞ்சாப் வெற்றி
. இந்த போட்டியில் அரை சதம் கடந்த ராகுல், ஐபிஎல் தொடரில் தனது 26வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள வெற்றி பெறுவது அவசியம். இதனால், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடின. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
அதனை அடுத்து, இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுலும், மயாங்க் அகர்வாலும் சிறப்பான ஓப்பனிங் தந்தனர். 9வது ஓவரை இந்த இணை களத்தில் நின்றது. அணியின் ஸ்கோர் 70-ஐ எட்டியப்போது வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் மயாங்க் அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் பூரன், மார்க்கரம், ஹூடா ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், டெத் ஓவர்களில் களமிறங்கினார் தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான்.
வந்தவுடன் அவர் அடித்த 1 சிக்சர், 1 பவுண்டரி பஞ்சாப் அணியின் ஸ்கோர் இலக்கை நெருங்கியது. மறுபுறம் ராகுல் நிதானமாக ஆட, 9 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது பஞ்சாப். இந்த போட்டியில் அரை சதம் கடந்த ராகுல், ஐபிஎல் தொடரில் தனது 26வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
FIFTY!@klrahul11 brings up his half-century with a SIX. This is his 26th in #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/c8nkyvV4Ja
சிவம் மாவி வீசிய 19வது ஓவரில், ராகுல் தூக்கி அடிக்க டீப் மிட்-விக்கெட்டில் இருந்து டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் திரிபாதி. ஆனால், ராகுல் ரிவ்யூ கேட்க, பந்து கிரவுண்டை தொட்டது ரிவ்யூவில் உறுதியானது. இதனால், கடைசி நேரத்தில் ஆட்டமிழப்பதை தவிர்த்த ராகுல், தொடர்ந்து ஆடினார். கடைசி ஓவரில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவர் அலப்பறைகள்:
வெற்றி பெற வேண்டிய போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பை கூட்டிய பஞ்சாப் அணி, கேப்டன் ராகுலின் விக்கெட்டை வாரி கொடுத்தது. ஒரு முறை எஸ்கேப்பான ராகுல், மீண்டும் ஒரு முறை அதே தவறை செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, பஞ்சாப் அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஷாரூக்கான் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
WHAT A WIN! 👏 👏
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Yet another nail-biter as @PunjabKingsIPL pull off a 5 wicket win over #KKR in Dubai. 👍 👍 #VIVOIPL #KKRvPBKS
Scorecard 👉 https://t.co/lUTQhNzjsM pic.twitter.com/3J2N1X6a4G
முதல் இன்னிங்ஸ் ரீகேப்:
முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பவுண்டரியோடு போட்டியை தொடங்கினார் வெங்கடேஷ் ஐயர். ஆனால், ஹர்ஷதீப் சிங் வீசிய 4வது ஓவரில் கில் க்ளீன் பவுல்டாகி வெளியேறினார். அவரை அடுத்து, திரிபாதி களமிறங்கினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்திருந்தாலும் இன்னொரு பக்கம் பவுண்டரிகளை விளாசி வந்த வெங்கடேஷ் ஐயர், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கில் அவுட்டானதை தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், திரிபாதி இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 35 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து கொல்கத்தாவை மீட்டனர். இதனால் 10 ஓவர்களில் முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஸ்கோருக்கான அடித்தளம் போட்டது கொல்கத்தா அணி.
சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தாவின் பேட்டர்களை பிஷ்னாயின் கூக்ளி பிரித்தது. 34 ரன்களுக்கு திரிபாதி அவுட்டானார். ஆனால், தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மோர்கன் 2 ரன்களுக்கு வெளியேறிய, ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் கடைசி ஓவர்களை எதிர்கொண்டனர்.
பஞ்சாப் பெளலர்களைப் பொருத்துவரை, பிஷ்னாய் (2), ஹர்ஷதீப் சிங் (3), ஷமி (1)ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தனர். கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடும்போது முட்டுக்கட்டைப் போட்டு விக்கெட்டுகள் எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.