மேலும் அறிய

IPL 2021, MI vs CSK: யாரு சாமி நீ.? யுஏஇயில் தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடும் ருதுராஜ்.. கடந்து வந்த பாதை!

யுஏஇயில் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணி மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி முதலில் தொடர்ச்சியாக விக்கெட் இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88  ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது. 

இந்நிலையில் இந்த ருதுராஜ் கெய்க்வாட் கடந்து வந்த பாதை என்ன? 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் சிறுவயது முதல் தனது அசாத்திய ஆட்டத்தால் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார். குறிப்பாக 2016-17ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்து அசத்தினார். அப்போது முதல் இவர் மீது அதிக வெளிச்சம் பட்டது. இந்த ஸ்டைலிஷ் மற்றும் திறமையான வீரர் யார் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் பிரபலமானார். 


IPL 2021, MI vs CSK: யாரு சாமி நீ.? யுஏஇயில் தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடும் ருதுராஜ்.. கடந்து வந்த பாதை!

பின்னர் இந்தியா ஏ அணிகளுக்கும் தேர்வாகி அசத்தினார். இவருக்கு 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பானதாக அமைந்தது. ஏனென்றால் இந்தத் தொடருக்கு பிறகு 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியில் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


IPL 2021, MI vs CSK: யாரு சாமி நீ.? யுஏஇயில் தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடும் ருதுராஜ்.. கடந்து வந்த பாதை!

இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சில நாட்கள் பயிற்சி செய்ய முடியாமல் தனிமை படுத்தப்பட்டிருந்தார். உடல்நிலை சரியான பிறகு  விளையாடிய முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரால் எட்டமுடியவில்லை. நான்காவது முறையாகக் கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகப் பயன்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்தப் போட்டியிலும் சென்னை அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக அமைந்தார். 

கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன் அந்த தொடரில் 6 போட்டிகளில் 204 ரன்கள் அடித்தார். இதனால்  நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் டுபிளசிஸ் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். இந்தத் தொடரில் தற்போது வரை 4 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நடப்பு தொடரில் 8 போட்டிகளில் 284 ரன்கள் அடித்துள்ளார். யுஏஇயில் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி வருகிறார். எனவே இதேபோன்று அடுத்து வரும் போட்டிகளிலும் இவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: ஒரே தொடரில் 4ஆவது அரைசதம் கடந்து அசத்திய ருதுராஜ் ; மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget