KKR vs SRH Live :ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
IPL 2021, Match 49, KKR vs SRH: துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். கொல்கத்தா அணியின் ப்ளே ஆப் சுற்றை நிர்ணயிக்கும் போட்டி இதுவாகும்.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரில் துபாய் மைதானத்தில் நடைபெறும் 49வது போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். கொல்கத்தா அணியின் ப்ளே ஆப் சுற்றை நிர்ணயிக்கும் போட்டி இதுவாகும்.
ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
ஹைதராபாத் நிர்ணயித்த 116 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து கொல்கத்தா அணி எட்டியது. இதன்மூலம் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றது.
கேமராவை உடைத்த ராணா..! அவுட்டாக்கிய ஹோல்டர்..!
ஹோல்டர் வீசிய பந்தில் நிதிஷ் ராணா அடித்த பவுண்டரி போட்டியை படம்பிடித்த கேமரா மீது பட்டதில் கேமராவின் லென்ஸ் உடைந்தது. அந்த ஓவரிலே நிதிஷ் ராணாவை ஹோல்டர் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த தினேஷ்கார்த்திக்
கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 5 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை குவித்த புதிய சாதனையை படைத்தார்.

கொல்கத்தா நம்பிக்கை நட்சத்திரம் : சுப்மன் கில் அவுட்
கொல்கத்தாவின் வெற்றிக்காக போராடிய சுப்மன்கில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.