KKR vs RCB Live Updates: தோல்வியுடன் விடைபெற்றார் விராட்கோலி : கொல்கத்தா அணி குவாலிபயருக்கு முன்னேறியது
IPL 2021, Match 58, CSK vs RCB: ஷார்ஜாவில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.
தோல்வியுடன் விடைபெற்றார் விராட்கோலி : கொல்கத்தா அணி குவாலிபயருக்கு முன்னேறியது
எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை தோற்கடித்தது. இதனால், பெங்களூர் அணிக்கான தனது கடைசி போட்டியில் விராட் கோலி தோல்வியுடன் வெளியேறினார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் : 12 பந்தில் 12 ரன்கள் : வெல்லப்போவது யார்?
முகமது சிராஜ் வீசிய18வது ஓவரில் சுனில் நரைன் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முகமது சிராஜ் பந்தில் போல்டானார் சுனில் நரைன்
கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 26 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
சுனில் நரைன் கொடுத்த எளிய கேட்ச்சை கோட்டைவிட்ட தேவ்தத்
ஆட்டத்தின் போக்கை மாற்றிய சுனில் நரைன் அளித்த எளிய கேட்ச்சை தேவ்தத் படிக்கல் கோட்டைவிட்டார்.
நிதிஷ் ராணாவை காலி செய்த சாஹல்
கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் நிதிஷ் ராணா 23 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் டிவிலியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.