Shane Watson on Rohit Sharma: நாங்க பார்த்த ரோகித்.. இப்போ இல்ல - ஆதங்கத்தில் ஷேன் வாட்சன்..!
Shane Watson on Rohit Sharma: ரோகித் சர்மாவின் ஃபார்ம் அவுட்டுக்கு அவரது வேலைப்பழு தான் காரணம் என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கையில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்த பேச்சுக்களை வெகுவாக ஊடங்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் அதிகப்படியான விமர்சங்களுக்கு அளாகி இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித சர்மா. ஏற்கனவே இவரைப் பற்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் நான்கு முதல் ஐந்து ஆட்டங்களில் விளையாடாமல், ஓயுவு எடுத்து தனது மனநிலையை ஒரு நிலைப் படுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தனியார் யூட்டூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா பற்றி கூறியிருந்தார். அதில் அவர், “ ரோகித் சர்மா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். ஆனால் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நிலையான கிரிக்கெட் விளையாடமுடியாமல் தவிப்பதாக நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிங்களிலும் கேப்டனாக உள்ள இவர் முன்பெல்லாம் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு அவர் களத்திற்கு வரும் போது அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அவரால் தற்போது முன்பு போல் பேட்டிங் செய்யமுடியவில்லை.
ஐபிஎல் போட்டியில் கடந்த சில வருடங்களாகவே ரோகித் சர்மாவால் சீரான மற்றும் நிலையான பேட்டிங்கினை வெளிப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் அவர் மனதளவில் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார் என நினைக்கிறேன். இதனால் தான் அவரால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என நினைக்கிறேன். ரோகித் அதில் கவனம் செலுத்த வேண்டும் என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இதுவரை 181 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மாவின் இந்த ஆண்டு அவரேஜ் இதுவரை 25.86 அக உள்ளது. அதேபோல், இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு அரைசதம் மட்டும் தான் அடித்துள்ளார். அதேபோல் அவரது தலைமையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. ஷேன் வாட்சன் குறிப்பிட்டது போல், மும்பை அணி பந்து வீச்சினால் தான் தோல்விகளைச் சந்த்திதுள்ளது. இது ரோகித் சர்மாவிற்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், இதிலிருந்து அவர் வெளிவந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு தனது கவனத்தினை செலுத்த வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.