மேலும் அறிய

GT vs SRH Score LIVE: பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..வெளியேறிய ஐதராபாத்..

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

LIVE

Key Events
GT vs SRH Score LIVE: பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..வெளியேறிய ஐதராபாத்..

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் சீசன்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 61 லீக் போட்டிகள் முடிந்த பிறகும் இதுவரை எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. முன்னணியில் இருந்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் கூட தோல்வியை சந்தித்து தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குஜராத் - ஐதராபாத் மோதல்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 

குஜராத் அணி நிலவரம்:

நடப்பு சாம்பியனான குஜராத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக குஜராத் இருக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியான கலவையாக உள்ள இந்த அணி, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. சுப்மன் கில், பாண்ட்யா, டேவிட் மில்லர், ரஷித் கான் போன்ற பல மேட்ச் வின்னர்கள் இருப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப குஜராத் அணி ஆர்வம் காட்டி வருகிறது.

ஐதராபாத் அணி நிலவரம்:

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியோ 11 போட்டிகளில் விளையாடி, வெறும் நான்கில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஐதராபாத் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதன் காரணமாக வாழ்வா, சாவா எனும் சூழலில் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. அதேநேரம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்தவொரு வீரரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளும் ரன் குவிக்க அதிக வாய்ப்புண்டு. மேலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுக்கலாம். 

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் குஜராத் அணியும் ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.  முதல் போட்டியில் ஐதராபாத் அணியும், இரண்டாவது போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை ஆகும்.

கணிக்கப்பட்ட இரு அணிகள்:

குஜராத் டைட்டன்ஸ் :

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, அல்சாரி ஜோசப், நூர் அகமது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

அபிஷேக் சர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி

23:23 PM (IST)  •  15 May 2023

குஜராத் உள்ளே.. ஐதராபாத் வெளியே

ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பாண்டின் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத். நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது ஐதராபாத்

23:23 PM (IST)  •  15 May 2023

150 ரன்களை எட்டிய ஐதராபாத்..

19.4  ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 150 ரன்களை எட்டியது

23:18 PM (IST)  •  15 May 2023

போராட்டம் முடிந்தது..

சிறப்பாக விளையாடி வந்த புவனேஷ்வர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்

23:13 PM (IST)  •  15 May 2023

18 ஓவர்கள் முடிந்தது..

18 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 136 ரன்களை சேர்த்துள்ளது

23:07 PM (IST)  •  15 May 2023

கடைசி நம்பிக்கையும் போனது..

தனி ஒரு ஆளாக போராடிய கிளாசென் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget