(Source: ECI/ABP News/ABP Majha)
GT vs SRH IPL 2023: முதல் டீமாக பிளே ஆஃப்பில் அடியெடுத்து வைக்குமா குஜராத்.. ஹைதராபாத்துடன் இன்று மோதல்.. யாருக்கு வெற்றி?
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஹைதராபாத் அணிக்கு ஐடன் மார்க்ரமும் தலைமை தாங்குகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர்ட மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பிறகு, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப்க்கு செல்ல தயாராக இருக்கும். அதேநேரத்தில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தால் பிளே ஆஃப்களுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறும்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஹைதராபாத் அணிக்கு ஐடன் மார்க்ரமும் தலைமை தாங்குகின்றனர். இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.
- போட்டி விவரங்கள்: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்
- தேதி & நேரம்: திங்கள், மே 15, இரவு 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளும் ரன் குவிக்க அதிக வாய்ப்புண்டு. மேலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுக்கலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகள்:
குஜராத் டைட்டன்ஸ் :
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, அல்சாரி ஜோசப், நூர் அகமது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
அபிஷேக் சர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், டி நடராஜன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹக் ஃபரூக்கி
எந்த வீரர் சிறந்ததாக வீரராக இருப்பார்..?
சுப்மன் கில்:
குஜராத் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரும் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் டாப் 5 இடங்களில் போட்டியிட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 475 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியிலும் இவரது அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம்.
ரஷித் கான்:
ஐபிஎல் 16வது சீசனில் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷித் கான் உள்ளார். இவரது மேஜிக்கல் ஸ்பெல் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்து, இன்றைய போட்டியிலும் ஹைதராபாத் அணியை கதிகலங்க செய்ய அதிக வாய்ப்பு.
இன்றைய போட்டி கணிப்பு: குஜராத் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.