மேலும் அறிய

IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?

IPL Auction: ஐ.பி.எல். ஏலம் இன்று நடைபெறும் நிலையில் சென்னை அணிக்கு புதிய விக்கெட் கீப்பராக யார் வருவார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தொடராக உருவெடுத்திருப்பது ஐ.பி.எல். தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இந்திய பிரபல வீரர்களுடன் வெளிநாட்டு பிரபலமான வீரர்களும் விளையாடுவதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

புதிய விக்கெட் கீப்பர்:

ஐ.பி.எல். தொடரில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையில் 5 கோப்பைகளை வென்ற சி.எஸ்.கே. அணி தங்கள் அணிக்கான புதிய விக்கெட் கீப்பரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. அவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாடினாலும் அடுத்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அந்த அணியின் புதிய விக்கெட் கீப்பரைத் தேடும் பணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

ரிஷப்பண்ட்டா? கே.எல்.ராகுலா?

இன்று நடைபெறும் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கைவசம் ரூபாய் 55 கோடி உள்ளது. 13 இந்திய வீரர்களையும், 7 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும். நடப்பு ஏலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர்கள்  டெல்லி அணிக்கு கேப்டனாக பதவி வகித்துள்ள ரிஷப்பண்ட், லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல், கடந்த ஐ.பி.எல். மகுடத்தை வென்று தந்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆவார்கள். இவர்ளை எந்த அணியினர் தங்கள் வசம் இழுக்கப் போகிறார்கள்? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய விக்கெட் கீப்பர் தேவைப்படுவதால் ரிஷப்பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க மும்முரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப்பண்ட் இருவரும் கேப்டனாக ஏற்கனவே பொறுப்பேற்றவர்கள் என்பதால், இவர்களை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் கேப்டன்சியை எதிர்பார்ப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவ்வாறு இருவரில் ஒருவரை ஏலத்தில் எடுத்தால் ருதுராஜிடம் இருந்து கேப்டன்சியை இருவரில் ஒருவருக்கு சென்னை அணி நிர்வாகம் வழங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சீசனில் தோனி விக்கெட் கீப்பிங் செய்தாலும் வருங்காலத்திற்காக புதிய மற்றும் இளம் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் சி.எஸ்.கே.விற்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
Embed widget