IPL History: ஐபிஎல்-ல் அதிக ரன்கள் குவித்த அணிகள்! முதல் இடம் யாருக்கு? லிஸ்ட் இதோ!
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகளை பார்ப்போம்.
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகளை பார்ப்போம்:
5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியுடன் மோதியது கொல்கத்தா அணி. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,முதலில் களம் இறங்கியது கொல்கத்தா அணி. அந்த போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை குவித்தது. சுனில் நரேன் (75) ரன்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் 50 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
4. சென்னை சூப்பர் கிங்ஸ்:
கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 246 ரன்களை குவித்தது. அதன்படி,இந்த பட்டியலில் சென்னை அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த போட்டியில் சென்னை அணி வீரர் முரளி விஜய் 127 ரன்களை குவித்தார். அதேபோல் ஆல்பி மோர்கல் 62 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
பெங்களூருவில் உள்ல சின்னசாமி மைதானத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.
2. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர்கள் கைல் மேயர்ஸ், மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது.
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான். கடந்த 2013 ஆம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி அதிரடியாக விளையாடியது. இந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அதன்படி, இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 263 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!