CSK vs PBKS LIVE Score: 999வது போட்டி: திக்..திக் நிமிடங்கள்.. கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
LIVE
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
சென்னை - பஞ்சாப் மோதல்:
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இரு அணிகளும் தாங்கள் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியை சந்தித்தன. சென்னை அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளது.
சென்னை அணியின் வியூகம் என்ன..?
இந்த சீசனில் சென்னை அணிக்காக கான்வே, ருதுராஜ் கெய்க்வார், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே ஆகியோர் ரன் குவித்து வருகின்றனர். அதேபோல், அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா இன்னும் பேட்டிங்கில் தங்களது பார்மை கொண்டு வரவில்லை. ஜடேஜா பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும், இன்றைய போட்டியில் ஜடேஜா, மகிஷ் தீக்ஷ்னா மற்றும் மொயின் அலி சுழலில் தாக்குதல் நடத்தலாம். ஏனெனில் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமான பிட்ச் என்பது மறக்க வேண்டாம்.
வேகப்பந்துவீச்சில் தீபக் சாஹர் இல்லாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அதிக ரன்களை தாரை வார்ப்பது கவலை அளிக்கிறது. இளம் வீரர்களான ஆகாஷ் சிங் மற்றும் பத்திரனா சிறப்பான பங்களிப்பை இன்று அளித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் வெற்றிபெறும். இன்றைய போட்டியில் சென்னை அணியில் அதிக மாற்றங்கள் இல்லை என்றாலும், காயத்தில் இருந்து குணமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பலாம்.
தவான் திரும்பியது சாதகமா..?
பஞ்சாப் அணியின் பிரச்சனை நிலைத்தன்மை இல்லாததுதான். காயத்திலிருந்து மீண்ட கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியும் பயனில்லை. இன்றைய போட்டியில் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா டெய்டே ஆகியோர் ரன் குவிக்க வேண்டும். சாம் கர்ரன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகின்றார். அதேபோல், அர்ஷ்தீப் சிங் மற்றும் ககிசோ ரபாடா வேகத்தில் மிரட்டலாம்.
CSK vs PBKS போட்டி விவரங்கள்:
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், போட்டி: 41
இடம்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
தேதி & நேரம்: ஞாயிறு, ஏப்ரல் 30, பிற்பகல் 3:30 மணி
டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
பிட்ச் எப்படி..?
எம்.ஏ. சிதம்பரம் மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சாக இருக்கும். டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
மேலும் ஒரு விக்கெட்
அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா அவுட்
12 பந்துகள் தான் மிச்சம்...
பஞ்சாப் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவை
சாம் கரண் போல்ட்
பதிரனா பந்துவீச்சில் சாம் கரண் ஆட்டமிழந்தார்
yஆருக்கு வெற்றி?..
பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வருதால் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது
24 ரன்களை கொடுத்த தேஷ்பாண்டே
தேஷ்பாண்டே வீசிய போட்டியின் 16வது ஓவரில் பஞ்சாப் அணி 24 ரன்களை குவித்தது