மேலும் அறிய

CSK vs LSG ipl 2023: டாஸ் வென்ற லக்னோ அணி போட்டியையும் வெல்லுமா?.. சென்னை அணி பேட்டிங்..!

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் 16வது சீசன்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்த சென்னை அணி, நடப்பாண்டு முதல் போட்டியிலேயே தோல்வியுற்றது. இதனிடையே, கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியல் மூன்றாம் இடம் பிடித்த லக்னோ அணி,  முதல் போட்டியிலேயே டெல்லி அணியை வீழ்த்தி நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனால் லக்னோ அணி தொடர் வெற்றியை பதிவு செய்யவும், சென்னை அணி முதல் வெற்றியை பெறவும் முனைப்பு காட்டி வருகிறது.

சென்னை அணி நிலவரம்:

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. சென்னை அணி பேட்டிங்கில் ஜொலிக்க இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உறுதுணையாக கான்வே, பென் ஸ்டோக்ஸ், ராயுடு,  மொயின் அலி, ஜடேஜா, தோனி மற்றும்  துபே ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. அதோடு கடந்த போட்டியை போன்று இல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட, தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் ஜொலிக்க வேண்டியுள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கத்தில் போட்டி:

மேலும் கடைசியாக சென்னை அணி இங்கு 2019 ஆம் ஆண்டு விளையாடியது. அந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 6 சென்னை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி சொந்த ஊர் மைதானத்தில் களமிறங்குகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

லக்னோ அணி நிலவரம்:

தொடரின் முதல் போட்டியில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் அசத்திய கைல் மேயர்ஸ் மற்றும் பூரான் ஆகியோருடன்  ஸ்டோய்னிஸ், கே.எல். ராகுல், ஹூடா, குருணால் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணிக்கு வெற்றி உறுதி. மார்க் உட்,  ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் தொடரில்  முதன்முறையாக களமிறங்கிய லக்னோ அணியுடன், சென்னை அணி இதுவரை ஒருமுறை மட்டுமே களம்கண்டுள்ளது. அதில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றுள்ளது. அதற்கு சென்னை அணி பழிதீர்க்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget