CSK vs KKR Final Live Updates: சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் : ரசிகர்கள் உற்சாகம்
CSK vs KKR IPL 2021 Final Score Live : 2021ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் தோனியின் படையுடன், மோர்கன் படை நேருக்கு நேர் துபாயில் இன்று மோதுகிறது.
LIVE
Background
ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு களமிறங்குகிறது.
சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் : ரசிகர்கள் உற்சாகம்
193 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பார்மிலே இல்லாத மோர்கன் அவுட் : 21 பந்தில் 68 ரன்கள் தேவை
கொல்கத்தாவின் கேப்டன் இயான் மோர்கன் 4 ரன்களில் தீபக் சாஹர் பிடித்த அற்புதமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். கொல்கத்தாவின் வெற்றிக்கு 21 பந்தில் 68 ரன்கள் தேவைப்படுகிறது.
வெற்றியின் விளிம்பில் சென்னை : 7வது விக்கெட்டையும் பறிகொடுத்தது கொல்கத்தா
கொல்கத்தாவின் அதிரடி வீரர் ராகுல் திரிபாதி 2 ரன்களில் வெளியேறினார். இதனால், சென்னை அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் : தோல்வியின் பிடியில் கொல்கத்தா?
கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சூழலில் தற்போது 6வது விக்கெட்டாக ஷகிப் அல் ஹசன் விக்கெட்டையும் இழந்து தடுமாறி வருகிறது.
5வது விக்கெட்டை இழந்த கொல்கத்தா : மோர்கன் காப்பாற்றுவாரா?
கொல்கத்தாவின் வெற்றிக்காக அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 1 சிக்ஸருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.