CSK vs DC LIVE Score: சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற டெல்லி!
IPL 2024, CSK vs DC LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
![CSK vs DC LIVE Score: சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற டெல்லி! CSK vs DC LIVE Score: சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற டெல்லி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/9ba2b339dab0d13ede051b58907a0e991711891004646102_original.jpg)
Background
17வது ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகரா ரெட்டி மைதானத்தில் இரு அணிகளும் களமிறங்கியது. புள்ளிப்பட்டியலிலைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளையும் தனது சொந்த மைதானமான சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் முறையாக வெளி மைதானத்தில் விளையாடுகின்றது.
அதேபோல் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் டெல்லி அணி வெளி மைதானத்தில் விளையாடியது. இந்நிலையில் இந்த சீசனில் டெல்லி அணியின் சொந்த மைதானமாக விசாகப்பட்டினம் மைதானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அணி தனது சொந்த மைதானத்தில் முதல் முறையாக களமிறங்குகின்றது.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 223 ரன்களை பதிவு செய்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக 110 ரன்களையும் பதிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 83 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக பதிவாகும். டெல்லி அணி வெற்றி பெற்றால், இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் வெற்றியாக பதிவாவது மட்டும் இல்லாமல், தனது ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்கும். அதேபோல் சென்னை அணி தோல்வியைத் தழுவினால் இந்த சீசனில் சென்னை அணி சந்திக்கும் முதல் தோல்வியாக அமையும்.
CSK vs DC LIVE Score: சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற டெல்லி!
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs DC LIVE Score: பவுண்டரிகளை விரட்டும் தோனி!
17வது ஓவரின் கடைசி பந்திலும் தோனி பவுண்டரிக்கு விளாசி அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார்.
CSK vs DC LIVE Score: களமிறங்கிய தோனி!
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தோனி களமிறங்கி, தான் எதிர் கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.
CSK vs DC LIVE Score: சிவம் துபே அவுட்!
போட்டியின் 17வது ஓவரின் முதல் பந்தில் சிவம் துபே தனது விக்கெட்டினை 17 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
CSK vs DC LIVE Score: 120 ரன்களை எட்டிய சென்னை!
16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)