டி20 சறுக்கல்: பந்த் கேப்டனாக இருக்கக் கூடாது.. கனேரியா காட்டம்!
சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பந்த் இரண்டு ஃபேஸ்களில் கேப்டனாக இருந்தார்.
சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பந்த் இரண்டு ஃபேஸ்களில் கேப்டனாக இருந்தார்.
ஐந்தாவது மற்றும் கடைசி டி20 மழையால் கைவிடப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க ரீ எண்ட்ரி கொடுப்பதற்கு முன்பு இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தது மற்றும் தொடரை 2-2 என்கிற செட் கணக்கில் முடித்தது. பந்த் மற்றும் எதிரணி கேப்டன் இருவரும் கேசவ் மஹராஜ் கோப்பையைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தனது தலைமை குறித்தும் அணியின் ஆட்டம் குறித்தும் தனக்கேயான சில ஐடியாக்களுடன் இங்கிலாந்துக்கு அணியுடன் பயணம் ஆனார் பந்த்.
24 வயதான பந்த் தனது நான்கு இன்னிங்ஸ்களிலும் அதே வழியில் அவுட் ஆனார். அதாவது வைட் அவுட்டாகி ஆஃப் ஸ்டம்பிலிருந்து பந்தை எடுக்க முயன்று கேட்ச் ஆனார். பேட்டிங் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் பந்தின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அவர் முந்தைய ஆட்டமிழப்பிலிருந்து அவர் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார்.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் தற்போது டி20 அணியில் இடம்பெற்றிருப்பதை அடுத்து இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் குறைந்த ஸ்கோரைத் திரும்பப் பெற்றால், தேர்வாளர்கள் பந்த் உடன் தொடர்வார்களா என்பதை உற்று நோக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தானின் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியாவும் இந்தத் தொடரில் பண்டின் ஆட்டத்தை சாடியுள்ளார். பந்த் இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை என்றும் மேலும் தலைமையின் அழுத்தம் அவரது பேட்டிங்கை பாதிக்கிறது என்றும் கனேரியா கூறியுள்ளார்.
View this post on Instagram
இது குறித்து தனது யூட்யூ சேனலில் பேசியுள்ள அவர்,"ரிஷப் பந்த் கேப்டனாக இருக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை. தென்னாப்பிரிக்கா தொடரில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்தார். கூடுதலாகக் கேப்டன் பதவியும் அவரது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இனி அவர் கேப்டனாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்" என்று கனேரியா காட்டமாகத் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா இல்லாத இந்த சமயத்தில் விராட் கோலிதான் தற்போது அணியை வழிநடத்தச் சரியானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.