(Source: ECI/ABP News/ABP Majha)
அசுரத்தனமாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக்… டி20 உலக கோப்பையில் ஃபினிஷர்! இந்தியாவின் வாயில் திறக்கிறதா?
டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே தற்போது இந்திய அணியின் வாயில்களும் திறந்துள்ளது.
இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் அதன் பிறகு இந்திய அணியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தனது இடம் முடிவுக்கு வந்துவிட்டாலும் டி20 போட்டிகளில் இன்னும் தனது இடம் முடியவில்லை என்று விளையாடி வருகிறார். நிச்சயம் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்று வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தனது இலக்கு என்று தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தனது ஆசையை தெரிவித்திருந்தார். அதோடு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் மீண்டும் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒருவராக இடம் பிடிப்பேன் என்று கூறியதோடு மட்டும் நிறுத்தாமல் தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே தற்போது இந்திய அணியின் வாயில்களும் திறந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வந்தாலும் தற்போது தான் மீண்டும் இந்திய அணியில் இணைய வேண்டும் என்பதனால் அசுரத்தனமான பேட்டிங்கின் மூலம் ரன் வேட்டை நிகழ்த்திவரும் அவர் இதுவரை 6 போட்டிகளில் 210 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 197 ரன்களை குவித்து தான் இன்னமும் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்து வருகிறார். இதுவரை சிஎஸ்கே அணி மட்டுமே அவரை அவுட் ஆக்கி உள்ளது, மற்ற அனைத்து போட்டிகளிலும் கடைசியில் முதல் பந்து முதலே வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு மாஸ் காட்டி வருகிறார். இவர் ஆட்டத்தை பார்க்கும் அனைவரும் கூறும் ஒரே விஷயம் இவரை இந்திய அணியில் பார்ப்பது எப்போது என்பது தான். அதற்கான அறிகுறிகள் தற்போதே தெரிய துவங்கி விட்டது. இதுகுறித்து பேசிய தேர்வாளர் ஒருவர், டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க தொடர் உள்ளது. தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால், அவரை நன்கு உற்று நோக்கி வருகிறோம். தற்போது வரை எல்லாமே சிறப்பு தான். ஆனால் வெறும் 6 போட்டியை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இன்னும் 8 - 10 போட்டிகள் வரை மீதமுள்ளது. அதிலும் சிறப்பாக ஆடினால் அவரை புறக்கணிக்க பிசிசிஐ-யிடம் காரணமே இருக்காது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் பல நாட்கள் இருப்பதால் தற்போது அதற்கான பணிகளை செய்து வருகிறோம். அதன்படி, தென்னாப்பிரிக்க தொடரை வைத்து சரி செய்துவிடுவோம், என்று தெரிவித்துள்ளார்.
அணியில் ஏற்கெனவே இதே இடத்தில் கன்சிஸ்டன்டாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டும் விக்கெட் கீப்பர் என்பதால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவும். சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் இரு போட்டிகள் அடித்துவிட்டு அதன்பிறகு கம்மென்று இருப்பதால், இதே நிலை தொடர்ந்தால் தினேஷ் கார்த்திகை தவிர்ப்பது தேர்வர்களுக்கு கடினமான விஷயம்தான். மேலும் பவுலிங் திறமைகளுடன் கூடிய பவர் ஹிட்டர்களுக்கும் பிசிசிஐ முக்கியத்துவம் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷிவம் டுபே கருத்தில் கொள்ளப் படுவார்கள் என்று நினைத்த நிலையில், ஹர்திக் பாண்டியா பழைய ஃபார்மை தாண்டி மிகவும் நேர்த்தியான நம்பர் 4 பிளேயராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திகழ்வது மட்டுமின்றி ஒரே ஒரு போட்டி மட்டுமே தோற்று அணியை முதல் இடத்தில் வைத்து வழிநடத்தி வருகிறார். ஆனாலும் சிறு சிறு காயங்கள் அவரை துரத்திக் கொண்டுதான் உள்ளன. இருப்பினும் பவர்பிளே பவுலிங், அட்டகாச ஃபீல்டிங், நேர்த்தியான பேட்டிங் என எல்லா வகையிலும் சிறந்த பெர்பார்மன்ஸை தந்து வருவதால் வெங்கடேஷ் ஐயர், ஷிவம் டுபே ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. அதிலும் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஷிவம் டுபேவிற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.