காலத்தை வென்ற ஐ.பி.எல் ஒயின்கள்
ஒயினுக்கு ஒரு பண்பு உண்டு - மற்ற பொஅதேபோன்றுதான் ஐ.பி.எல் தொடரில் சாதாரண வீருட்களைப்போல் இல்லாமல், காலம் செல்லச்செல்ல அதன் சுவை அதிகரிக்கும், மதிப்பு உயரும், expirydate என்பதே கிடையாது. வீரர்களாக அறிமுகமாகி, இன்றும் காலத்தை வென்று எங்களுக்கு எக்ஸ்பைரி டேட்டே இல்லை என்று நிற்கிறார்கள் இவர்கள்..
ஐபிஎல் 14-வது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது - 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் பல்வேறு சவால்கள், சர்ச்சைகளை கடந்து இன்று இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் தொடராக மாறிவிட்டது. ஐபிஎல் முதல் சீசனில் இடம்பெற்றிருந்த சில அணிகள் இன்று இல்லை, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கங்குலி பிசிசிஐ தலைவராக மாறிவிட்டார், இன்னும் அணியின் முன்னணி வீரர்களாக இருந்த பலர் லெஜன்ட் கிரிக்கெட், அணி பயிற்சியாளர்கள் என போய்விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு பிறகும் களத்தில் நிற்கிறார்கள் சில வீரர்கள்.
1) எம்.எஸ்.தோனி: முதல் சீசனில் இருந்து சென்னை அணியின் ஒரே கேப்டன், ஐ.பி.எல் தொடரில் 100 போட்டிகளுக்கு மேல் வெற்றியை கண்ட ஒரே கேப்டன், அதிகமுறை ப்ளேஆஃப் சுற்றுக்கு அணியை வழிநடத்திய கேப்டன், சுருக்கமாக சொன்னால் தல..
2) விராட் கோஹ்லி - 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கியபோது, இந்திய அணிக்காக அதுவரை விளையாடாத கோஹ்லி - பெங்களூரு அணிக்கு தேர்வானார். அன்று இவர்தான் கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்தை ஆள போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்தான் இன்று இந்திய அணியின் கேப்டன் கிங் கோஹ்லி.
3) ரோஹித் சர்மா - ஐ.பி.எல் தொடரில் ஓர் நிரந்தர அணி இல்லை, இந்திய அணியிலும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மாதான் 5 முறை ஐ.பி.எல் கோப்பையை கையில் ஏந்திய ஒரே கேப்டன்..
4) சுரேஷ் ரெய்னா - திறமையை அடையாளப்படுத்தி இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரராக உருவாக்கிக்கொண்டதில் ஐ.பி.எல் தொடர் முக்கியமானது. அன்று.. இன்று.. என்றும் Mr.IPL...
5) கிறிஸ் கெய்ல் - நடப்பு சீசனில் பஞ்சாப் அணிக்கு விளையாடும் கெய்ல்தான் தொடரிலேயே வயதில் இரண்டாவது பெரியவர் (இம்ரான் தாஹிர்க்கு பின்). சமீபத்தில் 1000 சிக்சர்களை T20 போட்டிகளில் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். யூனிவெர்ஸ் பாஸிற்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே.
6) ஏ.பி. டிவில்லியர்ஸ் - Mr.360० தென்னாப்பிரிக்க அணியில் இருந்து ஓய்வுபெற்று பல காலமாகியும், இன்று வரை இவரைப்போல் ஒரு வீரர் கிரிக்கெட் உலகில் இல்லை, எக்கால கிரிக்கெட்டிலும் டிவில்லியிர்ஸ் நிகர் டிவில்லியர்ஸ்தான்.
7) ட்வேய்ன் பிராவோ - மேற்கிந்திய தீவுகளில் இவருக்கு இருக்கும் மவுசை விட, ஐ.பி.எல் மற்றும் T20 தொடர்களில் இவருக்கான மவுசு அதிகம். T20 கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர்.
8) ரவிச்சந்திரன் அஸ்வின் - ஐ.பி.எல் கண்டெடுத்த முத்துகளில் சிறந்த சொத்து அஸ்வின். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிகரான அனுபவம் வாய்ந்த திறமையான சூழல் பந்து வீச்சாளர் நிகழ்காலத்தில் எந்த சர்வதேச டெஸ்ட் அணியிலும் இல்லை.
9) ரவீந்திர ஜடேஜா -2185 ரன்கள் பேட்டிங்கில், பந்துவீச்சில் 114 விக்கெட், துல்லியமான ஃபில்டிங் என ஒரு முழுமையான ஆல் ரவுண்டர்.
10) ஷிகர் தவான் - 5281 ரன் குவித்துள்ள தவான் ஐ.பி.எல் தொடரின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்.
11) அஜிங்கியா ரஹானே - சர்வதேச டெஸ்ட் அணியில் துணை கேப்டன், ஆனால் ஐ.பி.எல் தொடரில் நிரந்தர இடம் இன்னமும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.
12) இஷாந்த் ஷர்மா - 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர், ஆனால் ஐ.பி.எல் T20 போட்டிகளில் தற்போதுவரை 100 போட்டிகளை கடக்கமுடியாமல் தனக்கான இடத்தை உறுதிசெய்ய காத்திருக்கிறார்.
மேலும் தினேஷ் கார்த்திக், விர்த்திமான் சஹா, செத்தேஸ்வர் புஜாரா, மனிஷ் பாண்டே, தவால் குல்கர்னி, சித்தார்த் கவுல், ஸ்ரீரிவத் கோஸ்வாமி, சவுரவ் திவாரி, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, அமித் மிஸ்ரா, ராபின் உத்தபா ஆகியோரும் 2008-இல் ஐ.பி.எல் உருவானது முதல் ஏதோ ஒரு அணியில் தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
- கட்டுரையாளர்: அருஞ்ஜெயவர்மன்