மேலும் அறிய

IPL 2022 Auction: இதுதான் விலை.. இதுதான் விதிமுறை.. சூடுபிடிக்கும் ஐபிஎல்.! பொறிபறக்கப் போகும் ஏலத்தின் ரூல்ஸ்!

IPL 2022 Retention Rules, Purse Limit: 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். 

லக்னோ, அகமதாபாத் என்ற இரண்டு புது அணிகள் 2022ல் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 10 அணிகள் விளையாட உள்ள நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்கள் தக்கவைப்பது மற்றும் வீரர்கள் ஏலம் தொடர்பான அதிகாரப்பூர்வ தககவல்கள் வெளியாகியுள்ளன. 

விதிகளின் படி, தற்போது களத்தில் உள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்.  நால்வராக இருந்தால், அதில் குறைந்தது இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரைத் தக்கவைத்து கொள்ள வேண்டும். வரும் 30ம் தேதிக்குள், தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட வேண்டும்  என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.      

அணி வீரர்களின் மொத்த ஒப்பந்தத் தொகை 90 கோடியை விட அதிகமாக இருக்கக்கூடாது. அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இருக்க வேண்டும், அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். இரண்டு புது அணிகளுக்கும் இந்த பொதுவான விதிமுறை பொருந்தும்.   

இருப்பினும்,மற்ற அணிகள் விடுவித்த வீரர்களில் மூன்று பேரை ஏலம் வர்த்தக நடைமுறைக்கு வெளியே பெற்றுக் கொள்ளும் சுதந்திரத்தை பிசிசிஐ இந்த இரண்டு புது அணிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த மூவரில் கட்டாயம் இரண்டு இந்திய வீரர்கள் இருக்க வேண்டும்.   

ஐபிஎல் 2022: இவர்களை தான் ஐபிஎல் அணிகள் தக்கவைக்க உள்ளதா?- வீரர்கள் தக்கவைப்பு உத்தேச பட்டியல் !    

2022 ஐபிஎல் ஏலத்தில் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் சம்பள விவரங்கள்:    

நான்கு வீரர்கள்: 16 கோடி,12 கோடி, 8 கோடி, மற்றும் 6 கோடி என்ற ஊதியத் தொகுப்பில் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக, சென்னை அணி 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால், அந்த வீரர்களின் மொத்த மதிப்பு 42 கோடியாக இருக்க வேண்டும். மீதமுள்ள 48 கோடியில் மட்டும் தான் ஏணைய வீரர்களைப் பெற முடியும்.     

மூன்று வீரர்கள்: 15 கோடி, 11 கோடி, 7 கோடி என்ற ஊதியத் தொகுப்பில் தனது மூன்று வீரர்களை ஒரு அணித்   தக்கவைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம், ஒரு அணி 33 கோடி ரூபாயில் இரண்டு வீரர்களையும், மீதமுள்ள 57 கோடியில் ஏணைய வீரர்களைப் பெற முடியும்.   

இரண்டு வீரர்கள்: 14 கோடி, 10 கோடி என்ற ஊதியத் தொகுப்பில் தனது இரண்டு வீரர்களை ஒரு அணி  தக்கவைத்துக் கொள்ள முடியும். உதராணமாக, ஹைதராபாத் அணி, 24 கோடி மதிப்பில் 2 இரண்டு வீரர்களையும், மீதுமுள்ள 66 கோடியில் ஏணைய வீரர்களைப் பெற முடியும்.    

ஒருவர்: 14 கோடி (சர்வதேச அணி வீரர்), 4 கோடி ( சர்வதேச அணிக்காக விளையாடதவர்) என்ற ஊதியத் தொகுப்பில் தனது வீரர் ஒருவரை அணி தக்கவைத்துக் கொள்ள முடியும். 

ஒரு அணி தனது அனைத்து வீரர்களையும் விடுவித்து, புதிய வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கிக் கொள்ளலாம். பஞ்சாப் அணி இந்த யுக்தியை கடைபிடிக்கும் என்று நம்பப்படுகிறது. சென்னை  அணியைப் பொறுத்தவரை அந்த அணி சார்பில் 4 பேர் தக்கவைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தோனி,ஜடேஜா, டூபிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அந்த அணி தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அனுபவ வீரர் பிராவோவை சென்னை அணி இம்முறை தக்கவைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: இஸ்கானையும், ராமகிருஷ்ண மடத்தையும் மம்தா மிரட்டுகிறார் - மோடி பேச்சு
Breaking News LIVE: இஸ்கானையும், ராமகிருஷ்ண மடத்தையும் மம்தா மிரட்டுகிறார் - மோடி பேச்சு
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: இஸ்கானையும், ராமகிருஷ்ண மடத்தையும் மம்தா மிரட்டுகிறார் - மோடி பேச்சு
Breaking News LIVE: இஸ்கானையும், ராமகிருஷ்ண மடத்தையும் மம்தா மிரட்டுகிறார் - மோடி பேச்சு
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Embed widget