‛என்ன பாக்குற... பார்க்கல சார்... முறைக்கிறேன்...’ இங்கிலாந்தில் கர்ஜித்த ஆட்டோ ஓட்டுநர் மகன் சிராஜின் பின்னணி!
தனது குடும்ப வறுமை காரணமாக சிராஜ் எந்தவித அகாடமிக்கும் பயிற்சிக்கு செல்லவில்லை. எனினும் அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால் தீவிரமாக டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது. ஐந்தாவது நாளான இன்று இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து நாளை தொடங்கியது. இதனால் இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா என்ற நிலை காலையில் இருந்தது. ஆனால் பும்ரா மற்றும் ஷமியின் ஆட்டத்தால் அந்த நிலை மாறி இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்குமா என மாறியது.
நேற்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வேக்கப்பந்து வீச்சாளர்கள் ஷமி, பும்ரா,இஷாந்த் மற்றும் சீராஜ் ஆகிய நான்கு பேரும் சிறப்பாக பந்துவீசினார்கள். குறிப்பாக முகமது சீராஜ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் சிராஜ் எப்படி இந்திய அணியில் இடம்பிடித்தார்? அவருடைய தற்போதைய சிறப்பான செயல்பாடுகள் என்னென்ன?
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சிராஜ். இவரது தந்தை முகமது கவுஸ் ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணிப் புரிந்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக சிராஜ் எந்தவித அகாடமிக்கும் பயிற்சிக்கு செல்லவில்லை. எனினும் அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால் தீவிரமாக டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்தார். டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்க அவர் பள்ளி வகுப்புகளை புறக்கணித்தார். இவருடைய தந்தையின் கடின உழைப்பை பார்த்த சிராஜ் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய வீரராக வந்து தனது குடும்பத்தின் வறுமையை போக்க நினைத்தார்.
MAGIC is believing in yourself. If you can make that happen, you can make anything happen ✌🏻
— Mohammed Siraj (@mdsirajofficial) August 16, 2021
What a win, total team effort ❤️#miyamagic pic.twitter.com/7DchV7PVPs
இதன்விளைவாக அவருக்கு 2015ஆம் ஆண்டு ஹைதராபாத் ரஞ்சி அணியில் இடம் கிடைத்தது. அந்தத் தொடரில் 41 விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு இவரை 2.6 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கடந்த ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணிப் பயணம்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் பெரிதும் நெசித்த தந்தை இழந்தார். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளால் பயோபபுள் முறையில் இருந்த சிராஜ் தன்னுடைய தந்தையின் இறப்பிற்கு வர முடியாத சூழல் உருவானது. அந்த சோகத்தில் மீண்ட சிராஜ் மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸூம் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய வெற்றிக்கு சிராஜ் முக்கிய பங்கு அளித்த போட்டிகள்:
டெஸ்ட் போட்டிகள் | சிராஜ் எடுத்த விக்கெட்கள் |
மெல்பெர்ன் 2020 | 5 |
பிரிஸ்பேயின் 2021 | 6 |
லார்ட்ஸ் 2021 | 8 |
அப்போது முதல் சிராஜ் நேற்றைய லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி வரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தமாக 27 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் விளையாடியதில் இந்திய அணி 3 போட்டிகளில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. மெல்பெர்ன் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேயின் டெஸ்ட் போட்டி மற்றும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி இந்த மூன்று போட்டிகளில் மட்டும் சிராஜ் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு இந்த மூன்று போட்டிகளிலும் இவர் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு நெட் பவுலராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சிராஜ் தற்போது இந்திய வெற்றிக்கு விதிட்ட வீரராக மாறியுள்ளார்.
மேலும் படிக்க: டி-20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு ; இந்தியா, பாக்., மோதும் நாள் இதுதான்!